Sunday, May 22, 2011

சிறு கவிகள்-2
முகப்புத்தகத்தில் முகம் புதைக்கும் உறவுகளே முகவரிக்கு அது தந்த பெருமை தான் என்ன முன்னிலை பள்ளி மாணவர்கள் நிஜப்புத்தகத்தை முழுமையாக திறக்க மறந்தது இதன் விழைவா!!!

கட்டிளம் காளையருடன் கன்னியர் தாமும் கட்டவுட் படங்களை இணைத்து கதை பேசி கைத்தொலை பேசி நம்பரும் ஸ்கைப்பினில் பரிமாறி
கஸ்ரத்தில் விழுந்து காணாமல்போவதும் இதன்விழைவா !!!

கடுகதியில் பயணிக்கும் ரயிலில் விடு விடென்று காலடி ஓசை கேட்க ஓடி ஏறும் தொழிலாளர்களே நடு நிசிவரை தூக்கம் இன்றி விழித்து இருந்தால் நாளைய உங்கள் பணி நன்றாக நிறைவேறுமா !!!

தொட்டிலிலே குழந்தை வீச்செடுத்து அழ தோட்டத்திலேவெயிலில் உன்னவன் வேலைசெய்ய இக்கட்டினிலே உன் பெற்றவர்கள் தடுமாறி விழ இத்தனையும் உணராமல் முகப்புத்தகம் தேவையா !!!

இனிமையான நேரங்கள் கழிந்தன இணையத்தில் பசுமையான சில நினைவுகள் பிறந்தன இதயத்தில் உரிமையான உறவுகள் நிறைத்தனர் உள்ளத்தில் இருந்தாலும் வறுமையான உன் வாழ்க்கைக்கு உதவியதா?????
கண்கவர் பதுமையான இவள்
கவர்சியிலே தனை இழந்தான்
மனக்கண்ணில் இவள் நினைவு
மகுடம் ஆகி விட்டதனால் ,,,,,,,

...காதலுக்கு கண் இல்லை என்று
கவி அரசர் சொன்னது போல்
பார்வை அற்ற பெண்ணவளை
பார்த்தவுடன் காதல் கொண்டான் ,,,

பார்வை இல்லை என்று சொல்லி
பாவை அவள் மனம் மிக உருகி
நேசித்தவன் நேசம் அதை
யோசிக்க வேண்டும் என்றாள்,,

கடைசிவரை கவனமாக என்னை
காப்பாற்று வீர்கள் என்றால்
கருணை உள்ள உங்களை
கணவனாக ஏற்பேன் என்றாள்,,,

உருகி நின்ற உண்மை காதலால்
உலகை வென்றவன் போல்
அருவியாய் கண்ணீர் சிந்தியவளை
அரவணைத்து ஆறுதல் சொன்னான் ,,,,

இரக்க குணம் கொண்டவனோ
இதயத்தை பறி கொடுத்து விட்டதனால்
உறக்கம் இன்றி அவள் நினைவில்
உலவு கின்ற வேலை தன்னில்,,,

தயக்கம் இன்றி ஒரு முடிவை
தானாகவே எடுத்து விட்டான்
தான் ரசிக்கும் உலகத்தின் பேரழகை
தன்னவளும் ரசிக்க வேண்டும் என ,,

தன்கண்ணை அவன் தானம் செய்து
தரணியை அவள் பார்க்க செய்தான்
கண்ணான காதலிக்கு கனிவுடனே
கண் காதல் பரிசு அளித்தான் ,,,,,

மனக்கண்ணில் அவள் இருக்க
மண மாலை காத்து இருக்க
சுபமான நாள் ஒன்று பார்த்திருக்க
சுமதி வாயில் ரணமான பதில் வந்ததையா ,,

உனக்கும் கண் பார்வை இல்லை என
ஏன் எனக்கு சொல்ல வில்லை
கண் பார்வை இல்லாத உன்னை கணவனாக்கி
கஸ்ரத்தில் நான் விழ விரும்ப வில்லை ,,,

கண்ணானவளே என்னை நீ மறந்து விட்டாய்
ஏளன மாக்கி ஏமாற்ற நினைத்து விட்டாய் -ஏன்
கண்ணை ஆவது கடைசி வரைக்கும் கலங்காமல்
கவனமாக பார்த்துக்கொள் எனக்கூறி சென்றான் ,,,


எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

Thursday, May 12, 2011

கருணை உனக்கு இருந்ததா?
தாயே கருணை உனக்கு இருந்ததா !!!!!!!!!

உண்மைகள் சொன்னவர்கள் உயர்வாக
உள்ளத்தில் நேர்மையுடன் உல்லாசமாய்
உலகெல்லாம் வாழவில்லையா -உனது
...உயிருக்குள் கலந்த அந்த குழந்தை உறவின்
உருவை அழித்து இந்நாட்டு விசா தேவையா !!

ஆயிரம் உண்மை காரணம் இருக்கு-சுவிஸ்சில்
அகதி என்று நீ அந்தஸ்து பெறுவதற்கு -நீயோ
ஆமி கெடுத்ததால் ஆனதென்று சொல்வதற்காய்
அருமையான ஐந்து மாத உன் குழந்தையை-அம்மா நீ
அடிவயிற்றில் வைத்தே அழித்து விடுகின்றாயே !!

கல்லான கணவனின் செல்லாத வார்த்தையை
கருதி அந்த பொல்லாத வேலையை செய்து நீயே
கணவன் அணுவில் உருவாகிய உன் மழலையை
கருவில் இருந்தே கல்லறைக்கு அனுப்பினாயே
கருகிய அந்த சிசுவின் பாவம் உன்னை வாழவிடாது !!

பாவி மகள் நீ பாவத்தை செய்து விட்டு
பாலாவி தீர்த்தத்தில் பல முறை நீந்தினாலும்
பலகோவில்கள் படி ஏறி இரந்து கேட்டாலும்
பச்சிளம் குழந்தையை பதை பதைக்க கொன்ற
பாவம் தீராத பழியாக எழு பிறப்பும் தொடர்ந்து வரும் !!

பிள்ளை இல்லை என்று சொல்லி -இன்றோ
பிள்ளைவரம் வேண்டி திருக்கோவிலில் -நீ
வன்னி மரத்தில் கட்டிய வண்ணத்தொட்டில்
கண்ணெதிரே கட்டவிழ்ந்து விழுகின்றதே
காரணம் தான் நெஞ்சகத்தில் உனக்கு புரிகின்றதா !!

எல்லை இல்லா பரம் பொருளே -ஏன்
என்னை சோதனை செய்கின்றாய் -என்று
கடவுளே உனக்கு கருணை இல்லையா என
கண்ணீர் விட்டு கதறி அழுகின்றாயே -அன்று
கருணை உனக்கு இருந்ததா? எண்ணிப்பார் தாயே !!!


எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

Thursday, May 5, 2011

நன்றி மறந்தவன்...


காலம் எல்லாம் அவர் காலடியில்
காத்திருந்தேன் நல்ல துணையாக
கருப்பு என்று பேசி பேசி இணையாக
பலதேசம் கூட்டி சென்றார் -இன்றோ
அவரோடு சேர்ந்து நான் அலைந்து
...அடி நொந்து ஏலாமல் போனதனால்
பழசென்று என்னை ஒதுக்கி புதிதாக
சிவப்பென்று புதுத்துணை நாடி வடிவத்தில்
அழகென்று இவர் மயங்கி காரினிலே
ஏற்றிவந்தார் நாளை இவர் நடக்க நடக்க
அந்த துணையும் தேய்த்து போகும் பழசாகும்
என்னை போலவே என்றது பழைய செருப்பு !!!! 
மீசை முளைக்காத அவர் வயதில்
ஆசையுடன் அவர் படுத்தெழும்ப
வாசல் முதல் திண்ணை வரை
முத்தம் இட்டு நான் துடைத்தேன்
காசு உழைக்கும் ஆசையிலே
...கனடா சென்று வந்த மச்சான்
ஊர் வீடு வந்த பொழுதினிலே
கூட கொண்டுவந்த கூவறினால்
வீடெல்லாம் முத்தம் இட்டு
காலமெல்லாம் காத்திருந்த என்னை
கஸ்ரப்படுத்தி அடித்து உடைத்து
குப்பையிலே எறிந்து விட்டான்
என புலம்பியது பழைய தும்புத்தடி !!!!எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை