Monday, February 28, 2011

தொடர்ந்து வரும் தொல்லைகள்




எல்லை இல்லா உலகத்திலே
தொல்லைகள் தான் சொந்தம் ஐயா

நல்லையிலே முருகனை நாம் 
நாளும் வணங்கி வருவோம் என்றால் 
நாலு சந்தியிலும் ஆமி நின்று 
நாச வேலை செய்கின்றான் 

பள்ளிக்கூடம் சென்று வர 
பாதி வழி போகையிலே 
தெரு எல்லையிலே ஆமி நின்று 
தொல்லை ஐயா -சொந்த மண்ணில் 

காதலென்று கலைத்து கலைத்து 
கடிதங்கள் தந்தவனும் -அகதியாய் 
கனடா சென்றதுமே கயவனாக மாறி 
கைகழுவி விட்டான் ஐயா 

சோகத்திலே நான் இருக்க 
சொந்தங்கள் கலங்கி நிற்க 
ஊரினிலே நின்மதி இல்லை என்று 
சுவிஸ் இற்கு அகதியாக பறந்தேன் ஐயா 

அல்லல்கள் இருந்தாலும் 
அவலங்கள் துரத்தினாலும் 
வேலையிலே சேர்ததுமே
வேதனைகள் குறைந்தது ஐயா

காலத்தில் கலியாணம் 
கட்டி விட வேண்டும் என்று 
சேலத்து மாமி மகனை -என் தந்தை 
சொந்தமென்று பேசி வந்தார் 

சீர்வரிசை பலகொடுத்து 
ஊர் முழுக்க விருந்து வைச்சு 
மாமியோடு மருமகனை 
மறுகணமே அழைத்து வந்தேன் 

சுவிஸ் வந்து சேர்ந்ததுமே 
சூறாவளி வீசியது மாமி சுழன்றதனால்
ஆமிதொல்லை சொந்த மண்ணில் 
மாமி தொல்லை வந்த மண்ணில் 

பாவி மகள் வேலை என்று 
பறந்து திரிகின்றாள் -என் 
பையன் என்னோடு குளிரில் 
பயத்தில் உறைகின்றான் 

வாயார வசை மாரி -மாமியின் 
வாழ்த்த வேண்டிய வாய் பேசியதால் 
மனமுடைந்த குலமகள் மௌனம் கொண்ட 
மகன் மீதும் கோபம் கொண்டாள்

வாழ வேண்டிய வயதில் இந்த 
வாழ்க்கை அவளுக்கு வேறுத்ததனால்
ஆன்மிகம் அவள்தேடி அமைதி பெற 
ஆலயங்கள் சென்று வந்தாள்

அமைதி பெற ஆச்சிரமம் நல்லதென்று 
அவள் தோழி அறிவு உரைக்க 
அபலை இவள் தெளிவற்று -அவளோடு 
அந்த வழி தானும் சென்றாள்

ஆசி வழங்க வென சாமி ஆக 
அறிமுகம் செய்து அங்கு வந்தார் 
ஆசாமி ஆகி அவர் அறிவான 
ஆராய்சி என சீரழிவு செய்தார் 

பெண் என்று பிறந்து விட்டால் 
பேய் கூட சிரிக்கும் என்பர்
பெண் மண்ணில் படும் 
பெரும் துன்பம் யார் அறிவார் 

ஆமியுடன் மாமியும் சாமியும் 
அபலைகட்கு செய் துன்பம் யார் அறிவார்




This free script provided by
JavaScript Kit

Monday, February 14, 2011

கண்கள் உன் கனவில் வந்தவளை தேடிய வழியில்
உன் எண்ணங்களின் ஆசைநாயகி
பொன் வண்ண மயமாய் அழகாகவந்து
உன் கன்னங்களில் முத்தமிட்டாள் காதலர் தினத்தில்
 உன் கையில் அவளுக்காக காத்திருந்த ரோஜா மலரை
நீ எதிர் பார்த்திருந்த அந்த திருநாளில்
 சுவீகரித்தால் தனக்காக இன்றில் இருந்து
நீ அவளுக்காக ,,,!,,,,,,,,,,,,,,,,by ,,,,மேனகை ,,,,!;;;