Friday, June 17, 2011

பெண் அடிமை


இதிகாச இலக்கியங்களில் பெண் அடிமை

அயோத்தியின் அந்த புரத்திலே அறுபதுனாயிரம்
மனைவியருடன் அற்பசுகம் கண்டவன் தான்
மனுநீதி வளர்த்த வழியில் வந்த தசரத மகராஜன்
அதில் அன்புக்கு இனியவள் கைகேயிக்கு வரம்
அளித்து புத்திர சோகத்தில் தன் உயிரை விட்டு
அத்தனை பெண்களையும் ஏமாற்றியவன் தசரதன்!!

இராமனின் சுயநலத்தில் இராவணனின் பெண்ஆசையில்
ஈழத்தமிழ் பெண்கள் அன்றும் ஆரியத்தால் விதவை
ஆக்கப்பட்டு காடுகளில் அலைய விடப்பட்டார்கள்
காப்பாற்றி கூட்டி சென்ற சீதையை கூட அந்த ராமன்
பாரதத்தில் நடுக்காட்டில் அடி வயிற்றில் வளர்ந்த தன்
குழந்தைகளுடன் அலைய விட்டான் என்கிறது ராமாயணம் !!

மாயக்கண்ணனவன் ஆயர்குலத்திலே ஆடிபாடி
மாயங்கள் பலசெய்து அறுபதுனாயிரம் கோபியரை
மயக்கி மணம் செய்து லீலைகள் பல புரிந்து
சோலைகளில் தவிக்க விட்டு விட்டு மாயமாக
மறைந்து விட்டான் அங்கும் பேதையாக பெண்கள்
ஏமாற்றத்துடன் வாழ்விழந்து போனார்கள் !!!!

கங்கையை மணந்தும் பெண் ஆசை மேன்மையால்
தேவவிரதனை (பீஷ்மன் )சத்தியம் செய்ய வைத்து
சத்தியவதியை சரித்திரத்தில் மனைவியாக்கி
அத்தனை பெண்களையும் அநாதை ஆக்கிய மகா
பாரத போருக்கு வித்திட்டவன் பெண் ஆசையில்
மயங்கிய சந்திர வம்ச சந்தனு மகாராஜன் !!!!

சுயவரத்தில் அம்பால் மச்சைய யந்திரம் வீழ்த்தி
அர்ச்சுனன் வென்று அழைத்து வந்த பாஞ்சாலியை
தாயவள் குந்தியின் வாய் மொழித்தவர்றினால்
வாசு தேவகிருஷ்ணனே அங்கும் ஐவருக்கும்
அவளை மனைவியாக்கி உலகில்ஒவ்வாத செயலை
உருவாக்கி பெண் அடிமையை உயர்த்தியது பாரதம் !!

பாசம்


தத்தி தத்தி தடம்நோக நான் நடக்க-உன்
தலை அருகே உல்லாசமாய் நாய் இருக்க
கத்தி கதறி நான்அழும் வேளையிலே -உன்னை
கட்டி பிடித்தபடி நாய் என்னைபார்த்து சிரிக்கின்றதே!!

நம்பி உன் வயிற்றில் பிறந்த என்னை
நன்றி இல்லாபிள்ளையாக வளர்க வென
நடு ரோட்டில் இழுத்து செல்கின்றாயே
நண்பன் என நாயை தோளில் தூக்கியபடி !!

நாய்க்கு உண்டு நன்றி என்பது உண்மைதான் -என்
தாய்க்கு இல்லை பாசம் என்பதும் உண்மையா !!!!!!

முதுமை


என் அருமை பிள்ளைகளே கொஞ்சம் நில்லுங்கள்
என் ஆசை பேரக்குழந்தைகளிடமும் சொல்லுங்கள்
பொக்கை வாய் வந்தும் தனிமையில் வாடும் உங்கள்
பெற்றதாய் இங்கு படும் உடல் உள வேதனையை !!!!

கலாசாலைகளில் கற்றறிந்த என் கண்மணிகளே
கட்டிய என் கணவன் உயிர் பிரிந்து போனபின்னாவது
கண் கலங்காது பெற்றதாயை பார்க்கவேண்டுமென
கடைசிவரை உங்கள் உள் உணர்வு உணர்த்தவில்லையா!!!

நான் கடைசியாக செல்லமாக வளர்த்த கறுப்பு
நாயின் குட்டிகள் கூட பல வேளைகளில் வந்து
நம் வீட்டில் காவல் காக்கும் அந்த தாயை (நாயை)
நலம் விசாரித்து செல்கின்றது நான் மட்டும் தனிமையில்!!!

நாளைய பொழுதினில் நான் நிரந்தரமாய்
கண்ணுறங்கி விட்டால் நாலு நாளின் பின் வந்து
கல்லறையில் வீசும் எரிந்த என் உடலின் சாம்பல்
காற்றிடம் கேளுங்கள் என் கண்ணீரின் வலிமையை !!!

பறக்கும் தட்டு


பறக்கும் தட்டும் இல்லை இது பனை ஓலை
பறக்கவும் இல்லை பறக்கவிடும் நூலில் ஆடும்
பட்டம் போல் உலகை ஆட்டும் அமெரிக்காவின்
விஞ்ஞானத்தில் விளைந்த விந்தையான பட்டம் !!!

வேற்று கிரக வாசிகளின் வேலை இதுவென
சாட்டிப் பயம் காட்டுது எம்மை அமெரிக்கா
நாம் என்ன பாட்டி வடை சுட்ட காலம் போல்
போட்டி போட முடியாமலா இருக்கின்றோம் !!!

நீல் ஆம்ரோங்கும் எட்வின்னும் சந்திரனில்
இறங்கியதை யார் கண்டார் இவ்வுலகில்
அதுவும் அமெரிக்காவின் நான் என்ற ஆணவத்தின்
அடக்குமுறை குரல் ஒலிதான் என்கிறது மெய்ஞானம் !!!

சீனாவின் சிந்தனையோ மிக மிகப்பெரிது
பிறக்கும் குழந்தைகள் தொகையை வைத்தே
உலகை உலுக்கும் கரங்களை பலப்படுத்தி
உடைக்கின்றனர் உலக பொருளாதரத்தை !!!

இந்தியாவோ சாதி வெறி என்ற சதி வலையால்
இறக்கும் வரைக்கும் மனித குலத்தை இருட்டில்
நிறுத்தி இன்பம் காணும் கருத்தில் தானும்
நின்று கொண்டு ஆமாபோடுதே அமெரிக்காவுக்கு !!!

Sunday, May 22, 2011

சிறு கவிகள்-2
முகப்புத்தகத்தில் முகம் புதைக்கும் உறவுகளே முகவரிக்கு அது தந்த பெருமை தான் என்ன முன்னிலை பள்ளி மாணவர்கள் நிஜப்புத்தகத்தை முழுமையாக திறக்க மறந்தது இதன் விழைவா!!!

கட்டிளம் காளையருடன் கன்னியர் தாமும் கட்டவுட் படங்களை இணைத்து கதை பேசி கைத்தொலை பேசி நம்பரும் ஸ்கைப்பினில் பரிமாறி
கஸ்ரத்தில் விழுந்து காணாமல்போவதும் இதன்விழைவா !!!

கடுகதியில் பயணிக்கும் ரயிலில் விடு விடென்று காலடி ஓசை கேட்க ஓடி ஏறும் தொழிலாளர்களே நடு நிசிவரை தூக்கம் இன்றி விழித்து இருந்தால் நாளைய உங்கள் பணி நன்றாக நிறைவேறுமா !!!

தொட்டிலிலே குழந்தை வீச்செடுத்து அழ தோட்டத்திலேவெயிலில் உன்னவன் வேலைசெய்ய இக்கட்டினிலே உன் பெற்றவர்கள் தடுமாறி விழ இத்தனையும் உணராமல் முகப்புத்தகம் தேவையா !!!

இனிமையான நேரங்கள் கழிந்தன இணையத்தில் பசுமையான சில நினைவுகள் பிறந்தன இதயத்தில் உரிமையான உறவுகள் நிறைத்தனர் உள்ளத்தில் இருந்தாலும் வறுமையான உன் வாழ்க்கைக்கு உதவியதா?????
கண்கவர் பதுமையான இவள்
கவர்சியிலே தனை இழந்தான்
மனக்கண்ணில் இவள் நினைவு
மகுடம் ஆகி விட்டதனால் ,,,,,,,

...காதலுக்கு கண் இல்லை என்று
கவி அரசர் சொன்னது போல்
பார்வை அற்ற பெண்ணவளை
பார்த்தவுடன் காதல் கொண்டான் ,,,

பார்வை இல்லை என்று சொல்லி
பாவை அவள் மனம் மிக உருகி
நேசித்தவன் நேசம் அதை
யோசிக்க வேண்டும் என்றாள்,,

கடைசிவரை கவனமாக என்னை
காப்பாற்று வீர்கள் என்றால்
கருணை உள்ள உங்களை
கணவனாக ஏற்பேன் என்றாள்,,,

உருகி நின்ற உண்மை காதலால்
உலகை வென்றவன் போல்
அருவியாய் கண்ணீர் சிந்தியவளை
அரவணைத்து ஆறுதல் சொன்னான் ,,,,

இரக்க குணம் கொண்டவனோ
இதயத்தை பறி கொடுத்து விட்டதனால்
உறக்கம் இன்றி அவள் நினைவில்
உலவு கின்ற வேலை தன்னில்,,,

தயக்கம் இன்றி ஒரு முடிவை
தானாகவே எடுத்து விட்டான்
தான் ரசிக்கும் உலகத்தின் பேரழகை
தன்னவளும் ரசிக்க வேண்டும் என ,,

தன்கண்ணை அவன் தானம் செய்து
தரணியை அவள் பார்க்க செய்தான்
கண்ணான காதலிக்கு கனிவுடனே
கண் காதல் பரிசு அளித்தான் ,,,,,

மனக்கண்ணில் அவள் இருக்க
மண மாலை காத்து இருக்க
சுபமான நாள் ஒன்று பார்த்திருக்க
சுமதி வாயில் ரணமான பதில் வந்ததையா ,,

உனக்கும் கண் பார்வை இல்லை என
ஏன் எனக்கு சொல்ல வில்லை
கண் பார்வை இல்லாத உன்னை கணவனாக்கி
கஸ்ரத்தில் நான் விழ விரும்ப வில்லை ,,,

கண்ணானவளே என்னை நீ மறந்து விட்டாய்
ஏளன மாக்கி ஏமாற்ற நினைத்து விட்டாய் -ஏன்
கண்ணை ஆவது கடைசி வரைக்கும் கலங்காமல்
கவனமாக பார்த்துக்கொள் எனக்கூறி சென்றான் ,,,


எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

Thursday, May 12, 2011

கருணை உனக்கு இருந்ததா?
தாயே கருணை உனக்கு இருந்ததா !!!!!!!!!

உண்மைகள் சொன்னவர்கள் உயர்வாக
உள்ளத்தில் நேர்மையுடன் உல்லாசமாய்
உலகெல்லாம் வாழவில்லையா -உனது
...உயிருக்குள் கலந்த அந்த குழந்தை உறவின்
உருவை அழித்து இந்நாட்டு விசா தேவையா !!

ஆயிரம் உண்மை காரணம் இருக்கு-சுவிஸ்சில்
அகதி என்று நீ அந்தஸ்து பெறுவதற்கு -நீயோ
ஆமி கெடுத்ததால் ஆனதென்று சொல்வதற்காய்
அருமையான ஐந்து மாத உன் குழந்தையை-அம்மா நீ
அடிவயிற்றில் வைத்தே அழித்து விடுகின்றாயே !!

கல்லான கணவனின் செல்லாத வார்த்தையை
கருதி அந்த பொல்லாத வேலையை செய்து நீயே
கணவன் அணுவில் உருவாகிய உன் மழலையை
கருவில் இருந்தே கல்லறைக்கு அனுப்பினாயே
கருகிய அந்த சிசுவின் பாவம் உன்னை வாழவிடாது !!

பாவி மகள் நீ பாவத்தை செய்து விட்டு
பாலாவி தீர்த்தத்தில் பல முறை நீந்தினாலும்
பலகோவில்கள் படி ஏறி இரந்து கேட்டாலும்
பச்சிளம் குழந்தையை பதை பதைக்க கொன்ற
பாவம் தீராத பழியாக எழு பிறப்பும் தொடர்ந்து வரும் !!

பிள்ளை இல்லை என்று சொல்லி -இன்றோ
பிள்ளைவரம் வேண்டி திருக்கோவிலில் -நீ
வன்னி மரத்தில் கட்டிய வண்ணத்தொட்டில்
கண்ணெதிரே கட்டவிழ்ந்து விழுகின்றதே
காரணம் தான் நெஞ்சகத்தில் உனக்கு புரிகின்றதா !!

எல்லை இல்லா பரம் பொருளே -ஏன்
என்னை சோதனை செய்கின்றாய் -என்று
கடவுளே உனக்கு கருணை இல்லையா என
கண்ணீர் விட்டு கதறி அழுகின்றாயே -அன்று
கருணை உனக்கு இருந்ததா? எண்ணிப்பார் தாயே !!!


எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

Thursday, May 5, 2011

நன்றி மறந்தவன்...


காலம் எல்லாம் அவர் காலடியில்
காத்திருந்தேன் நல்ல துணையாக
கருப்பு என்று பேசி பேசி இணையாக
பலதேசம் கூட்டி சென்றார் -இன்றோ
அவரோடு சேர்ந்து நான் அலைந்து
...அடி நொந்து ஏலாமல் போனதனால்
பழசென்று என்னை ஒதுக்கி புதிதாக
சிவப்பென்று புதுத்துணை நாடி வடிவத்தில்
அழகென்று இவர் மயங்கி காரினிலே
ஏற்றிவந்தார் நாளை இவர் நடக்க நடக்க
அந்த துணையும் தேய்த்து போகும் பழசாகும்
என்னை போலவே என்றது பழைய செருப்பு !!!! 
மீசை முளைக்காத அவர் வயதில்
ஆசையுடன் அவர் படுத்தெழும்ப
வாசல் முதல் திண்ணை வரை
முத்தம் இட்டு நான் துடைத்தேன்
காசு உழைக்கும் ஆசையிலே
...கனடா சென்று வந்த மச்சான்
ஊர் வீடு வந்த பொழுதினிலே
கூட கொண்டுவந்த கூவறினால்
வீடெல்லாம் முத்தம் இட்டு
காலமெல்லாம் காத்திருந்த என்னை
கஸ்ரப்படுத்தி அடித்து உடைத்து
குப்பையிலே எறிந்து விட்டான்
என புலம்பியது பழைய தும்புத்தடி !!!!எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

Saturday, April 23, 2011

சிறு கவிகள்-1

வாழ்க்கை ஒளி பெறுமா.........?

தமிழை தேடும் நம் தாய் தமிழர்களும்
தந்தையை அறியாத பல பிள்ளைகளும்
தங்கள் நிலை புரியாத வாலிபர்களும் -என
தவறான பாதையில் பயணிக்கும் யாழ் !!!!

வியாபாரம் என்று வந்தவர்கள் வீடமைப்பு
வீடுகளில் வாழ்தவர்கள் கூட்டில் அடைப்பு
வீதி ஓரம்எல்லாம் உயிர்கொல்லும் கசிப்பு வடிப்பு
வீணாய் போகின்றது மாணவர்கள் நல்ல படிப்பு !!!!

கலாசாலையில் கருத்து மோதலால் கைகலப்பு
காதல் லீலைகளால்சில பெண்கள் கருக்கலைப்பு
தெரு ஒரத் தொல்லைகளால் நாய் குலைப்பு
தெய்வங்களின் கல்லறைகள் கூட அழித்தொழிப்பு!!

சில சுயநலவாதிகள் திட்டம் இட்ட செயல் இதுவா?
சிந்தனைகள் இடம் பெயர்வதால் வரும் செயலா?
இந்த நிலை மாறி நல்ல நிலை வருமா?
இருள் நீங்கி தமிழர் வாழ்க்கை ஒளி பெறுமா.........?எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

தாயே கருணை உனக்கு இருந்தால்!!!!!!!!!

உண்மைகள் சொன்னவர்கள் உயர்வாக
உள்ளத்தில் நேர்மையுடன் உல்லாசமாய்
உலகெல்லாம் வாழவில்லையா -உனது
...உயிருக்குள் கலந்த அந்த குழந்தை உறவின்
உருவை அழித்து இந்நாட்டு விசா தேவையா !!

ஆயிரம் உண்மை காரணம் இருக்கு-சுவிஸ்சில்
அகதி என்று நீ அந்தஸ்து பெறுவதற்கு -நீயோ
ஆமி கெடுத்ததால் ஆனதென்று சொல்வதற்காய்
அருமையான ஐந்து மாத உன் குழந்தையை-அம்மா நீ
அடிவயிற்றில் வைத்தே அழித்து விடுகின்றாயே !!

கல்லான கணவனின் செல்லாத வார்த்தையை
கருதி அந்த பொல்லாத வேலையை செய்து நீயே
கணவன் அணுவில் உருவாகிய உன் மழலையை
கருவில் இருந்தே கல்லறைக்கு அனுப்பினாயே
கருகிய அந்த சிசுவின் பாவம் உன்னை வாழவிடாது !!

பாவி மகள் நீ பாவத்தை செய்து விட்டு
பாலாவி தீர்த்தத்தில் பல முறை நீந்தினாலும்
பலகோவில்கள் படி ஏறி இரந்து கேட்டாலும்
பச்சிளம் குழந்தையை பதை பதைக்க கொன்ற
பாவம் தீராத பழியாக எழு பிறப்பும் தொடர்ந்து வரும் !!

பிள்ளை இல்லை என்று சொல்லி -இன்றோ
பிள்ளைவரம் வேண்டி திருக்கோவிலில் -நீ
வன்னி மரத்தில் கட்டிய வண்ணத்தொட்டில்
கண்ணெதிரே கட்டவிழ்ந்து விழுகின்றதே
காரணம் தான் நெஞ்சகத்தில் உனக்கு புரிகின்றதா !!

எல்லை இல்லா பரம் பொருளே -ஏன்
என்னை சோதனை செய்கின்றாய் -என்று
கடவுளே உனக்கு கருணை இல்லையா என
கண்ணீர் விட்டு கதறி அழுகின்றாயே -அன்று
கருணை உனக்கு இருந்தால் எண்ணிப்பார் தாயே !!!எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

Monday, April 18, 2011

கண்ணானவன்

missing you...


கண்கவர் பதுமையான இவள்

கவர்சியிலே தனை இழந்தான்
மனக்கண்ணில் இவள் நினைவு
மகுடம் ஆகி விட்டதனால் ,,,,,,,

காதலுக்கு கண் இல்லை என்று

கவி அரசர் சொன்னது போல்
பார்வை அற்ற பெண்ணவளை
பார்த்தவுடன் காதல் கொண்டான் ,,,

பார்வை இல்லை என்று சொல்லி

பாவை அவள் மனம் மிக உருகி
நேசித்தவன் நேசம் அதை
யோசிக்க வேண்டும் என்றாள்,,

கடைசிவரை கவனமாக என்னை

காப்பாற்று வீர்கள் என்றால்
கருணை உள்ள உங்களை
கணவனாக ஏற்பேன் என்றாள்,,,

உருகி நின்ற உண்மை காதலால்

உலகை வென்றவன் போல்
அருவியாய் கண்ணீர் சிந்தியவளை
அரவணைத்து ஆறுதல் சொன்னான் ,,,,

இரக்க குணம் கொண்டவனோ

இதயத்தை பறி கொடுத்து விட்டதனால்
உறக்கம் இன்றி அவள் நினைவில்
உலவு கின்ற வேலை தன்னில்,,,

தயக்கம் இன்றி ஒரு முடிவை

தானாகவே எடுத்து விட்டான்
தான் ரசிக்கும் உலகத்தின் பேரழகை
தன்னவளும் ரசிக்க வேண்டும் என ,,

தன்கண்ணை அவன் தானம் செய்து

தரணியை அவள் பார்க்க செய்தான்
கண்ணான காதலிக்கு கனிவுடனே
கண் காதல் பரிசு அளித்தான் ,,,,,

மனக்கண்ணில் அவள் இருக்க

மண மாலை காத்து இருக்க
சுபமான நாள் ஒன்று பார்த்திருக்க
சுமதி வாயில் ரணமான பதில் வந்ததையா ,,

உனக்கும் கண் பார்வை இல்லை என

ஏன் எனக்கு சொல்ல வில்லை
கண் பார்வை இல்லாத உன்னை கணவனாக்கி
கஸ்ரத்தில் நான் விழ விரும்ப வில்லை ,,,

கண்ணானவளே என்னை நீ மறந்து விட்டாய்

ஏளனமாக்கி ஏமாற்ற நினைத்து விட்டாய் -ஏன்
கண்ணை ஆவது கடைசி வரைக்கும் கலங்காமல்
கவனமாக பார்த்து கொள் என கூறி சென்றான் ,,, 
எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

Tuesday, April 5, 2011

உயிரில் கலந்த உறவு


சென்னை மருத்துவமனையில் நிலா கண்விழிக்கும் வேளைக்காக ஒரு நிமிடம் கூட உறங்காமல் அந்த நள்ளிரவு நேரத்தில் காத்திருந்தான் சிவா ,,,தூக்கம் கண்ணை கட்டினாலும் துக்கம் நெஞ்சை வருடியதால் அவள்கால்களை தலையை தடவியவாறே அவன் மனக்கண்ணில் அந்த நாட்களில் நினைவுகளில் தன்னை மறந்து உலா வந்தான்

சிறிய கிராமம் தான் அவனது ஊர் கோயில்கள் பாடசாலைகள் வைத்தியசாலை என சாதாரண வசதிகள் உள்ள ஊர் அது அங்கு ஆசிரியர்களாக தொழில் புரிந்த அம்மா அப்பாவுக்கு ஒரே செல்ல பிள்ளைதான் சிவா .நடுத்தர குடும்பம் அவர்களுடையது ஊரில் கௌரவமாக வாழ்ந்த குடும்பம் என்று சொன்னால் மிகையாகாது. இளமை பிராயத்தில் இருந்தே துடினமும் கெட்டித்தனமும் உள்ள சிறுவன் சிவா எல்லாத்துறைகளிலும் மிகவும் சாதுரியமானவனாக இருந்தான் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில்பரிட்சையில் பாசாகினான் பெற்றவர்கள் அவனின் எதிர்காலத்தை தம் வாழ்கையில் குறிக்கோளாக கொண்டு யாழ் இந்து கல்லூரியில் சேர்த்து சிவாவின் தந்தையுடன் கலாசாலையில் படித்த ஒரு நண்பரின் வீட்டில் தங்கும் வசதியும் செய்து கொடுத்தார்கள் நண்பன் வீட்டிலும் சிவா போன்று துடிப்புமிக்க கேட்டிதனமுள்ள மகன் இருந்தான் அவன்தான் வினோ அவனது அன்பு தங்கை தான் நிலா

சிவாவும் வினோவும் நாளடைவில் இனிய நண்பர்கள் ஆனார்கள் படிப்பிலும் விளையாட்டுக்களிலும் அவர்களிக்கு நிகர் அவர்களே நன்றாக ஒற்றுமையாக இருவரும் சேர்ந்து படித்தார்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவார்கள் தங்கைக்கும் பாடம் சொல்லி கொடுப்பார்கள் தங்கையும் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று வேம்படி மகளிர் கல்லூரியில் சேர்ந்து படித்தாள் பெற்றவர்களும் பிள்ளைகளின் படிப்புக்கு நன்றாக உதவினார்கள் வினோவின் பெற்றவர்கள் சிவாவை நன்றாக கவனித்தார்கள் இடை இடை சிவாவின் அம்மா அப்பாவும் வந்து பார்த்துவிட்டு போனார்கள் இவ்வாறு காலங்கள் கடந்தன சிவாவும் வினோவும் சாதாரண தர பரீட்சையில் அனைத்துபாடங்களிலும் அதிதிறமை சித்தி பெற்றார்கள் பலரது பாராட்டையும் பெற்றார்கள். பெற்றவர்களும், மகிழ்சிக்கடலில் மூழ்கினார்கள் இருவரும் விஞ்ஞான துறையினை தெரிவு செய்து ஆர்வத்துடன் படித்தார்கள்

சிவாவின் ஊரில் கோவில் திருவிழா வந்தது அந்த திருவிழாவுக்கு வினோ குடும்பத்தினரை ஒவ்வொரு முறையும் சிவா அழைத்து போவான்
இம்முறை வினோவின் தாய்தந்தையரால் தவிக்கமுடியாத காரணத்தால் போக முடியவில்லை வினோவும் நிலாவும் சிவாவுடன் போனார்கள்
இந்த பத்து நாட்களும் அவர்களுக்கு ஒரு இனிமையான சுற்றுலா போலவே இருந்தது ஊரில் ஊர் வம்பு பேசுபவர்கள் என்றைக்குமே காரணம் தேடிக்கொண்டு இருப்பார்கள் அவர்களுக்கு இந்த முறை சிவாவையும் நிலாவையும் இணைத்து கதைக்கும் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது பொய்யை உண்மையாக புனையும் அசாத்திய திறமை உடையவர்களும் அங்கு இருந்தார்கள் என்று சொன்னாலும் பொருந்தும் அந்தவகையில் பல காரண காரியங்களை புனைந்து பலகாதுகளுக்கு இவர்கள் இருவரும் காதல் என்ற கட்டுகதையை அவிட்டு விட்டார்கள் (அதுவே அவர்களுக்கு காதல் உருவாக காரணம் ஆனதும் உண்மைதான் அவர்கள் வயது அப்படி )சிவாவின் சிறுவயது நண்பர்கள் நிலாவின் காதுக்கு கேட்கும் படி நேரடியாகவும் கேலி செய்தார்கள் நிலாவின் இளமனது தனக்குள்ளே ஆசை என்ற அசைவுகளின் வழியில் அலைபாய்ந்து விடை தேடியது சிவாவுக்கும் மனதளவில் விருப்பம் இருந்தாலும் சில காரணங்களால் மறைக்கும் வழியில் தன் புலன்களை செலுத்தினான் ஆனால் அவர்கள் இதயம் ஒருவரை மற்றவர் எண்ணி துடித்ததால் நாளடைவில் கண்ணியமான காதல் உருவானது இருவரும் யாருக்கும் பாதிப்புவராமல் அன்புலகில் பறவை ஆனார்கள் சில நாட்களில் கடவுள் அவர்கள் சிறகை வருந்தத்தக்க இழப்பின் மூலம் பறக்க முடியால் செய்துவிட்டான்

அந்தவேளையில்தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவானது ஜெயவர்த்தனாவின் மாயவலைக்குள் விழுந்து காந்தி பிறந்த மண்ணில் பிறந்த ராஜீவ் காந்தி அமைதி படை என்ற ரீதியில் அநியாயப்படையை அனுப்பி வைத்தது விடுதலை புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் ஈழ வரலாற்றில் மறக்க முடியாத இந்த போர் மூண்டது அந்த போரில் ஒரு தாக்குதலில் அகப்பட்டு வினோ நிலாவின் தாயும் தந்தையும் உயிர் பிரிந்தார்கள் செய்தியறிந்த பிள்ளைகள் துடியாய் துடித்தார்கள் சிவாவும் தாங்கமுடியாத வருத்தத்துடன் தவித்தான் உறவுகள் கூடி அழகூட முடியாத அவசர காலநிலை இருந்தாலும் சில உறவுகள் ஒன்று சேர்ந்து இறுதி கடமைகளை செய்தார்கள் இறுதிகடமையில் சிவா வின் பெற்றவர்களும் கலந்து கொண்டார்கள் இறுதிகடமை செய்த வினோ தங்கையை முத்தம் இட்டு அழுதவன் சிறிது நேரத்தின் பின்னர் காணவில்லை அவன் இந்த கொடூரமான செயலை தாங்க முடியாமல் விடுதலை புலிகளுடன் சேர்ந்து விட்டதாக செய்தி மட்டும் வந்தது யாரும் ஒன்றுமே செய்ய முடியாத நிலை சிவாவின் பெற்றவர்கள் நிலாவையும் சிவாவையும் யாழ் நிலைமை மிக மோசமாக இருப்பதான் எண்கள் ஊருக்கு கூட்டி போவதாக கூறினார்கள் நிலாவின் மாமா நாங்கள் நிலாவை பார்க்கின்றோம் நீங்கள் சிவாவை கூட்டிக்கொண்டு உடனே ஊருக்கு போங்கள் அல்லது இவனும் இயக்கத்துக்கு போய் விடுவான் என்று எடுத்து சொன்னார்கள் சிவாவின் பெற்றவர்கள் நிலாவுடனும் உறவுகளிடமும் விடைபெற்று சிவாவை அழைத்துக்கொண்டு போனார்கள் அன்று நிலாவை கட்டியழுது பிரிந்த சிவா இன்று அவள் அறியாமலே அவள் தலையை தடவி விட்டுக்கொண்டு இருக்கின்றான்

ஊருக்கு போனவுடன் சிவாவின் அப்பா அம்மா சிவாவை வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்து உடனே அதற்காக தனது நகைகள் அனைத்தையும் கொடுத்து உறவுகளிடம் அவசரமாக கடனும் பெற்று ஒருவழியாக கண்ணுக்குள் வைத்து இருந்து சுவிஸ் நாட்டுக்கு முகவர் மூலம் அனுப்பிவைத்தார்கள் சிவாவுக்கோ நண்பன் வழியில் போகவேண்டும் சிங்கள இந்திய ராணுவத்தை எதிர்த்து ஏதாவது தானும் செய்ய வேண்டும் என்ற துடிப்பு அவனுள்ளே அதற்கு வினோ போன அடுத்த நிமிடத்தில் இருந்து பெற்றவர்கள் சாதுரியமாக தடை செய்து சுவிஸ் அனுப்பிவிட்டார்கள்
இருந்தாலும் அவன் இங்கு வந்து வேலை செய்து களத்தில் நின்றவர்களின் கரங்களுக்கு வலு சேர்த்தான் அதுவும் செய்ய வேண்டிய முக்கியமானதொன்று என காலப்போக்கில் தன்னையும் புலம் பெயர்நாட்டில் இருந்து செயல் படும் புல்லு தின்னாதவனாகவே வாழ அர்ப்பணித்தான்
இடை இடை நிலா நினைவுகள் வந்துவாட்டும் அந்த வேளைகளில் உருக்கமான வரிகளில் கடிதம் எழுதுவான் அவளும் சோகங்கள் வாழ்வாகி போனதால் அதே வகையில் பதில் போடுவாள் அவள் தொடர்ந்து படித்து மருத்துவ துறையில் இறுதி படிப்பு படித்துக்கொண்டு இருந்தாள் அண்ணன் வினோ ஒரே ஒரு தடவை வந்து பார்த்ததாகவும் சிவா பெற்றவர்கள் பலதடவை வந்து பார்த்ததாகவும் கடிதங்களில் எழுதுவாள் இப்படி நாள் நகர்ந்து கொண்டு இருக்க சந்திரிகா அரசின் சிங்கள ராணுவத்துடனான போரில் மருத்துவ வசதிகள் இன்றி பல போராளிகள் உயிர் இழப்பதை பலவழிகளில் அறிந்தாள் அந்த வேளையில் தன் அண்ணன் போன்ற பல அண்ணன்கள் உயிர் முறையான மருத்துவம் இல்லாமல் பிரிவதற்கு தான் ஏன் உதவக்கூடாது என்று நினைத்து தன்னையும் போராட்டத்தில் இணைக்கின்றாள் இணையும் முன் சிவாவுக்கும் கடிதம் மூலம் விபரமாக தெரிவிக்கிறாள் சிவாவும் பரந்த நோக்கில் விடயங்களை விளங்கி கொள்பவனாக இருந்ததால் அவள் செயலை தடுக்கவும் இல்லை போராட்டத்தில் இணைந்த நிலா தனக்கு ஏதாவது நடந்தால் சிவாவுக்கு தகவல் சொல்லும் படி விபரம் தெருவித்து இருத்தாள் அவள் போராட்டத்தில் இணைந்த நாளில் இருந்து கடும் சண்டைகள் நடந்ததால் பலர் காயங்களுக்கு உள்ளாகினார்கள் அவள் அண்ணன் வினோ போராளிஆனபின் ஒருமுறை கண்டபின் இதுவரைக்கும் காணவில்லை தானும் போராளி ஆனது கூட அண்ணனுக்கு தெரியாது ஒரு கடும் சண்டையில் காயப்பட்ட பலருக்கு அவசர வைத்திய பிரிவில் இவள் வைத்தியம் செய்துகொண்டு பரிவாக காயப்பட்ட போராளிகளை கவனித்து கொண்டு இருந்தாள் இந்த இடத்தில கடுமையாக காயப்பட்ட ஒரு போராளி நிலா நிலா என்று கூப்பிடும் குரல் கேட்டு திரும்பி பார்க்கின்றாள் அவளுடைய அண்ணன் பலத்த காயங்களுடன் படுக்கையில் கிடந்தான் தன் கலங்கிய கண்களை துடைத்தவாறு ஓடிப்போகிறாள் அவனுக்கு அவசர சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்கின்றாள் வினோவின் அணியினர் எங்கள் ,தளபதியை காப்பற்றுங்கள் அண்ணனை காப்பற்றுங்கள் என்று அழுகுரல்களேடு மன்றாடுகின்றார்கள் (நிலாவின் அண்ணன் என்பதை அறியாமல் ),,,கடுமையான முயற்சி செய்தும் அவனை அவளால் காப்பற்ற முடியவில்லை
அவன் இறுதியில் அவளுக்கு கூறிய வார்த்தை நான் மட்டும் உனக்கு அண்ணன் இல்லை போராளிகள் அனைவரும் உன் சகோதரங்களே என்று கூறி அவள் மடியில் தலை சாய்த்து உயிர் விடுகின்றான்

நிலா பல அண்ணன் தம்பிகள் உயிரை காப்பாற்றி இருக்கின்றாள் பல அக்கா தங்கை உயிரை காப்பற்றி இருக்கின்றாள் ஆனாலும் தன் அண்ணனை காப்பாற்ற தன் மருத்துவம் உதவவில்லை என எண்ணி மனம் வருந்துவாள் சோர்ந்து போவாள் இருந்தாலும் அண்ணனின் கடைசி வார்த்தை அவன் முன்னே பல உறவுகளை காட்டியதால் தொடர்ந்தும் மருத்துவ சேவை செய்தாள் ஒருமுறை களத்தில் காயப்பட்டவர்களுக்கு களத்திலேயே நின்று சேவை செய்த நிலா விமானத்தாக்குதலில் கடுமையாக காயப்பட்டு ஈழத்தில் வைத்தியம் செய்ய போதிய மருந்துகள் இல்லாததால் தலைமை முடிவெடுத்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள் நிலா முன்னமே தனக்கு ஏதாவது நடந்தால் சிவாவுக்கு அறிவிக்கும் படி கேட்டு இருந்ததாலும் சிவாவை பலவழிகளில் தலைமை ஒரு செய்யல்பாட்டலராக இனம் கண்டு இருந்ததாலும் உடனே அறிவித்தார்கள் சிவாவும் செய்தி அறிந்தவுடன் இந்தியா வந்து அவள் அவசர சிகிச்சைக்கு தேவையான முழு இரத்தத்தையும் தானே கொடுத்து அவன் கண் விளிக்கும் தருணத்துக்காக காத்திருக்கும் சிவா தான் கரங்களை கண்விழித்து தடவும் தன் நிலா வின் முகத்தை பார்கிறான் அவளோ அவன் விழியில் வழியும் கண்ணீரை துடைத்து " தமிழன் அழக்கூடாது" என்று சொல்கின்றாள் ,,,,,,,,,,அவன் உயிரோடு கலந்த உறவாக,
This free script provided by
JavaScript Kit

Tuesday, March 22, 2011

நினைத்து பார்த்தாயா?

வீட்டில் உள்ள உறவுகளின் நிலை உணராமல்
வினையாகும் விளையாட்டு பிள்ளைகளாய்
வெளிநாட்டினிலே வாழ்கின்ற நண்பர்களே
சொந்த நாட்டினிலே சொந்தங்கள் படும்
துன்பங்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்
...
முன் நூறு நாள் சுமந்து பெற்றெடுத்து
முகம் மலர முகம் கழுவி குளிப்பாட்டி
மூன்று வேளை உணவூட்டிய உன் தாய்
தாய் நாட்டில் உன்னை எண்ணி படும் பாட்டை
கொஞ்சம் நீ நினைத்து பார்த்தாயா ,,,,

மழலையாய் மகிழ்ந்து விளையாட உன்
மனம் விரும்பியதை வாங்கி தந்து
தினம் வருந்தி உழைத்த காசை உனக்காய்
செலவு செய்த உன் அருமை தந்தையை
ஒரு கணமேனும் நீ நினைத்து பார்த்தாயா ,,,,

தமிழ் பண்டிகை காலங்களில் உன் அப்பா
தனக்கென்று தானாக எதுவும் வாங்காமல்
உனக்காக விதம் விதமாய் உடை வாங்கி
உடுத்து அழகு பார்த்த உன் பெற்றவர்களை
கொஞ்சம் நீ நினைத்து பார்த்தாயா ,,,,,,,

வெளிநாடு மகன் போகவென உற்றவர்கள்
வெயிலிலே வெந்து உழைத்த காசோடு
பலரிடம் கடன்பட்டதையும் ஒன்றாக்கி தந்ததையும்
அம்மாவின் கொடியுடன் தங்க நகை அத்தனையும்
அடைவில் இருப்பதை நீ நினைத்து பார்த்தாயா

 
வீட்டில் முட்டை இட்ட கோழியை கூட நீ
விடை பெற்ற நாளினிலே சட்டியிலே கறியாக்கி
தட்டினிலே பரிமாறிய தாய் தந்தையர் இன்று
இக்கட்டினிலே கடன் தொல்லையில் இருப்பதை
இக்கணமாவது நீ நினைத்து பார்த்தாயா ,,,,,

கூடப் பிறந்து உன்னோடு குழந்தை பருவத்தில்
ஓடித்திரிந்து விளையாடி ஒன்றாக உறங்கிய
உன் சகோதரங்கள் அண்ணா என்று ஆசையுடன்
உன் கையை எதிர் பார்த்து வாடி இருக்கும் உன்
உண்மை உறவுகளை நீ நினைத்து பார்த்தாயா ,,,

சிங்களமோ திட்டங்களை தீட்டி ஏமாற்றினார்கள்
சட்டங்களை தங்கள் வசமாக்கினார்கள் அந்த
வட்டத்தில் வாழமுடியாத கட்டத்தில் நாடுகளில்
அலைந்து அகதி ஆனோம் இன்னும் நாம் இக்கட்டில்
இருக்கும் உறவுகளுக்கு உதவாமல் இருப்பதன் மாயம் என்ன ,,

பாரம் பரிய வட்டத்தில் வாழ்ந்த நாங்கள்
பாரீஸில் லண்டனில் சூரிச்சில் கனடாவில்
கட்டவிழ்ந்த காளைகளாய் கன்னியர்கள் பின்னாலே
காடையர்கள் உடன் சேர்ந்து சட்டங்களை கூட
மறந்து கடும் சேட்டை செய்வதன் மாயமென்ன ,,

கஸ்ரங்கள் பட்டது போதும் உன் உறவுகள்
காலத்தால் கேட்டது போதும் உன் வாழ்க்கை
காலங்கள் மாறட்டும் கஸ்ரங்கள் ஓடட்டும்
கண்ணீரில் வாழும் சொந்த உறவுகளை நீங்கள்
கருணை காட்டி காப்பாற்றுங்கள் நண்பர்களே ,,!!This free script provided by
JavaScript Kit

Saturday, March 5, 2011

தமிழரோடு தமிழில் பேசுவோம்


உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து நாநூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது


எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. “பொதுவான தமிழ்” இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் “வட்டார மொழி இலக்கியங்கள்” என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் “அழிந்து போன மொழிகளின் பட்டியலில்” தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு “ஏயக்” மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.


தமிழரோடு தமிழில் பேசுவோம்…
தமிழன் என்று சொல்வோம்...
தலை நிமிர்ந்து நிற்போம்…


“தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்லை"


This free script provided by
JavaScript Kit

Monday, February 28, 2011

தொடர்ந்து வரும் தொல்லைகள்
எல்லை இல்லா உலகத்திலே
தொல்லைகள் தான் சொந்தம் ஐயா

நல்லையிலே முருகனை நாம் 
நாளும் வணங்கி வருவோம் என்றால் 
நாலு சந்தியிலும் ஆமி நின்று 
நாச வேலை செய்கின்றான் 

பள்ளிக்கூடம் சென்று வர 
பாதி வழி போகையிலே 
தெரு எல்லையிலே ஆமி நின்று 
தொல்லை ஐயா -சொந்த மண்ணில் 

காதலென்று கலைத்து கலைத்து 
கடிதங்கள் தந்தவனும் -அகதியாய் 
கனடா சென்றதுமே கயவனாக மாறி 
கைகழுவி விட்டான் ஐயா 

சோகத்திலே நான் இருக்க 
சொந்தங்கள் கலங்கி நிற்க 
ஊரினிலே நின்மதி இல்லை என்று 
சுவிஸ் இற்கு அகதியாக பறந்தேன் ஐயா 

அல்லல்கள் இருந்தாலும் 
அவலங்கள் துரத்தினாலும் 
வேலையிலே சேர்ததுமே
வேதனைகள் குறைந்தது ஐயா

காலத்தில் கலியாணம் 
கட்டி விட வேண்டும் என்று 
சேலத்து மாமி மகனை -என் தந்தை 
சொந்தமென்று பேசி வந்தார் 

சீர்வரிசை பலகொடுத்து 
ஊர் முழுக்க விருந்து வைச்சு 
மாமியோடு மருமகனை 
மறுகணமே அழைத்து வந்தேன் 

சுவிஸ் வந்து சேர்ந்ததுமே 
சூறாவளி வீசியது மாமி சுழன்றதனால்
ஆமிதொல்லை சொந்த மண்ணில் 
மாமி தொல்லை வந்த மண்ணில் 

பாவி மகள் வேலை என்று 
பறந்து திரிகின்றாள் -என் 
பையன் என்னோடு குளிரில் 
பயத்தில் உறைகின்றான் 

வாயார வசை மாரி -மாமியின் 
வாழ்த்த வேண்டிய வாய் பேசியதால் 
மனமுடைந்த குலமகள் மௌனம் கொண்ட 
மகன் மீதும் கோபம் கொண்டாள்

வாழ வேண்டிய வயதில் இந்த 
வாழ்க்கை அவளுக்கு வேறுத்ததனால்
ஆன்மிகம் அவள்தேடி அமைதி பெற 
ஆலயங்கள் சென்று வந்தாள்

அமைதி பெற ஆச்சிரமம் நல்லதென்று 
அவள் தோழி அறிவு உரைக்க 
அபலை இவள் தெளிவற்று -அவளோடு 
அந்த வழி தானும் சென்றாள்

ஆசி வழங்க வென சாமி ஆக 
அறிமுகம் செய்து அங்கு வந்தார் 
ஆசாமி ஆகி அவர் அறிவான 
ஆராய்சி என சீரழிவு செய்தார் 

பெண் என்று பிறந்து விட்டால் 
பேய் கூட சிரிக்கும் என்பர்
பெண் மண்ணில் படும் 
பெரும் துன்பம் யார் அறிவார் 

ஆமியுடன் மாமியும் சாமியும் 
அபலைகட்கு செய் துன்பம் யார் அறிவார்
This free script provided by
JavaScript Kit

Monday, February 14, 2011

கண்கள் உன் கனவில் வந்தவளை தேடிய வழியில்
உன் எண்ணங்களின் ஆசைநாயகி
பொன் வண்ண மயமாய் அழகாகவந்து
உன் கன்னங்களில் முத்தமிட்டாள் காதலர் தினத்தில்
 உன் கையில் அவளுக்காக காத்திருந்த ரோஜா மலரை
நீ எதிர் பார்த்திருந்த அந்த திருநாளில்
 சுவீகரித்தால் தனக்காக இன்றில் இருந்து
நீ அவளுக்காக ,,,!,,,,,,,,,,,,,,,,by ,,,,மேனகை ,,,,!;;;


Monday, January 31, 2011

என்றும் மாறாமல்...


சிறை வைத்த கனவுகளையும்
சிலர் தீண்ட நினைத்தாலும்
பலர் வந்து அறிவுரைகள்
பலவாறு சொன்னாலும்
கலையாத நினைவுகளை
கவிதைகளில் வடித்தாலும்
நிலையான கொள்கையிலே
நீங்காத நினைவுடனே
நித்திலத்தில் வாழ்கின்றேன்...!
Friday, January 28, 2011

எனது வலைப்பக்கத்திற்கு அன்பு உள்ளங்களை இனிதாய் வரவேற்கிறேன்.
அன்புடன்,
மேனகை.