Friday, June 17, 2011

பெண் அடிமை


இதிகாச இலக்கியங்களில் பெண் அடிமை

அயோத்தியின் அந்த புரத்திலே அறுபதுனாயிரம்
மனைவியருடன் அற்பசுகம் கண்டவன் தான்
மனுநீதி வளர்த்த வழியில் வந்த தசரத மகராஜன்
அதில் அன்புக்கு இனியவள் கைகேயிக்கு வரம்
அளித்து புத்திர சோகத்தில் தன் உயிரை விட்டு
அத்தனை பெண்களையும் ஏமாற்றியவன் தசரதன்!!

இராமனின் சுயநலத்தில் இராவணனின் பெண்ஆசையில்
ஈழத்தமிழ் பெண்கள் அன்றும் ஆரியத்தால் விதவை
ஆக்கப்பட்டு காடுகளில் அலைய விடப்பட்டார்கள்
காப்பாற்றி கூட்டி சென்ற சீதையை கூட அந்த ராமன்
பாரதத்தில் நடுக்காட்டில் அடி வயிற்றில் வளர்ந்த தன்
குழந்தைகளுடன் அலைய விட்டான் என்கிறது ராமாயணம் !!

மாயக்கண்ணனவன் ஆயர்குலத்திலே ஆடிபாடி
மாயங்கள் பலசெய்து அறுபதுனாயிரம் கோபியரை
மயக்கி மணம் செய்து லீலைகள் பல புரிந்து
சோலைகளில் தவிக்க விட்டு விட்டு மாயமாக
மறைந்து விட்டான் அங்கும் பேதையாக பெண்கள்
ஏமாற்றத்துடன் வாழ்விழந்து போனார்கள் !!!!

கங்கையை மணந்தும் பெண் ஆசை மேன்மையால்
தேவவிரதனை (பீஷ்மன் )சத்தியம் செய்ய வைத்து
சத்தியவதியை சரித்திரத்தில் மனைவியாக்கி
அத்தனை பெண்களையும் அநாதை ஆக்கிய மகா
பாரத போருக்கு வித்திட்டவன் பெண் ஆசையில்
மயங்கிய சந்திர வம்ச சந்தனு மகாராஜன் !!!!

சுயவரத்தில் அம்பால் மச்சைய யந்திரம் வீழ்த்தி
அர்ச்சுனன் வென்று அழைத்து வந்த பாஞ்சாலியை
தாயவள் குந்தியின் வாய் மொழித்தவர்றினால்
வாசு தேவகிருஷ்ணனே அங்கும் ஐவருக்கும்
அவளை மனைவியாக்கி உலகில்ஒவ்வாத செயலை
உருவாக்கி பெண் அடிமையை உயர்த்தியது பாரதம் !!

பாசம்


தத்தி தத்தி தடம்நோக நான் நடக்க-உன்
தலை அருகே உல்லாசமாய் நாய் இருக்க
கத்தி கதறி நான்அழும் வேளையிலே -உன்னை
கட்டி பிடித்தபடி நாய் என்னைபார்த்து சிரிக்கின்றதே!!

நம்பி உன் வயிற்றில் பிறந்த என்னை
நன்றி இல்லாபிள்ளையாக வளர்க வென
நடு ரோட்டில் இழுத்து செல்கின்றாயே
நண்பன் என நாயை தோளில் தூக்கியபடி !!

நாய்க்கு உண்டு நன்றி என்பது உண்மைதான் -என்
தாய்க்கு இல்லை பாசம் என்பதும் உண்மையா !!!!!!

முதுமை


என் அருமை பிள்ளைகளே கொஞ்சம் நில்லுங்கள்
என் ஆசை பேரக்குழந்தைகளிடமும் சொல்லுங்கள்
பொக்கை வாய் வந்தும் தனிமையில் வாடும் உங்கள்
பெற்றதாய் இங்கு படும் உடல் உள வேதனையை !!!!

கலாசாலைகளில் கற்றறிந்த என் கண்மணிகளே
கட்டிய என் கணவன் உயிர் பிரிந்து போனபின்னாவது
கண் கலங்காது பெற்றதாயை பார்க்கவேண்டுமென
கடைசிவரை உங்கள் உள் உணர்வு உணர்த்தவில்லையா!!!

நான் கடைசியாக செல்லமாக வளர்த்த கறுப்பு
நாயின் குட்டிகள் கூட பல வேளைகளில் வந்து
நம் வீட்டில் காவல் காக்கும் அந்த தாயை (நாயை)
நலம் விசாரித்து செல்கின்றது நான் மட்டும் தனிமையில்!!!

நாளைய பொழுதினில் நான் நிரந்தரமாய்
கண்ணுறங்கி விட்டால் நாலு நாளின் பின் வந்து
கல்லறையில் வீசும் எரிந்த என் உடலின் சாம்பல்
காற்றிடம் கேளுங்கள் என் கண்ணீரின் வலிமையை !!!

பறக்கும் தட்டு


பறக்கும் தட்டும் இல்லை இது பனை ஓலை
பறக்கவும் இல்லை பறக்கவிடும் நூலில் ஆடும்
பட்டம் போல் உலகை ஆட்டும் அமெரிக்காவின்
விஞ்ஞானத்தில் விளைந்த விந்தையான பட்டம் !!!

வேற்று கிரக வாசிகளின் வேலை இதுவென
சாட்டிப் பயம் காட்டுது எம்மை அமெரிக்கா
நாம் என்ன பாட்டி வடை சுட்ட காலம் போல்
போட்டி போட முடியாமலா இருக்கின்றோம் !!!

நீல் ஆம்ரோங்கும் எட்வின்னும் சந்திரனில்
இறங்கியதை யார் கண்டார் இவ்வுலகில்
அதுவும் அமெரிக்காவின் நான் என்ற ஆணவத்தின்
அடக்குமுறை குரல் ஒலிதான் என்கிறது மெய்ஞானம் !!!

சீனாவின் சிந்தனையோ மிக மிகப்பெரிது
பிறக்கும் குழந்தைகள் தொகையை வைத்தே
உலகை உலுக்கும் கரங்களை பலப்படுத்தி
உடைக்கின்றனர் உலக பொருளாதரத்தை !!!

இந்தியாவோ சாதி வெறி என்ற சதி வலையால்
இறக்கும் வரைக்கும் மனித குலத்தை இருட்டில்
நிறுத்தி இன்பம் காணும் கருத்தில் தானும்
நின்று கொண்டு ஆமாபோடுதே அமெரிக்காவுக்கு !!!