Tuesday, March 22, 2011

நினைத்து பார்த்தாயா?

வீட்டில் உள்ள உறவுகளின் நிலை உணராமல்
வினையாகும் விளையாட்டு பிள்ளைகளாய்
வெளிநாட்டினிலே வாழ்கின்ற நண்பர்களே
சொந்த நாட்டினிலே சொந்தங்கள் படும்
துன்பங்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள்
...
முன் நூறு நாள் சுமந்து பெற்றெடுத்து
முகம் மலர முகம் கழுவி குளிப்பாட்டி
மூன்று வேளை உணவூட்டிய உன் தாய்
தாய் நாட்டில் உன்னை எண்ணி படும் பாட்டை
கொஞ்சம் நீ நினைத்து பார்த்தாயா ,,,,

மழலையாய் மகிழ்ந்து விளையாட உன்
மனம் விரும்பியதை வாங்கி தந்து
தினம் வருந்தி உழைத்த காசை உனக்காய்
செலவு செய்த உன் அருமை தந்தையை
ஒரு கணமேனும் நீ நினைத்து பார்த்தாயா ,,,,

தமிழ் பண்டிகை காலங்களில் உன் அப்பா
தனக்கென்று தானாக எதுவும் வாங்காமல்
உனக்காக விதம் விதமாய் உடை வாங்கி
உடுத்து அழகு பார்த்த உன் பெற்றவர்களை
கொஞ்சம் நீ நினைத்து பார்த்தாயா ,,,,,,,

வெளிநாடு மகன் போகவென உற்றவர்கள்
வெயிலிலே வெந்து உழைத்த காசோடு
பலரிடம் கடன்பட்டதையும் ஒன்றாக்கி தந்ததையும்
அம்மாவின் கொடியுடன் தங்க நகை அத்தனையும்
அடைவில் இருப்பதை நீ நினைத்து பார்த்தாயா

 
வீட்டில் முட்டை இட்ட கோழியை கூட நீ
விடை பெற்ற நாளினிலே சட்டியிலே கறியாக்கி
தட்டினிலே பரிமாறிய தாய் தந்தையர் இன்று
இக்கட்டினிலே கடன் தொல்லையில் இருப்பதை
இக்கணமாவது நீ நினைத்து பார்த்தாயா ,,,,,

கூடப் பிறந்து உன்னோடு குழந்தை பருவத்தில்
ஓடித்திரிந்து விளையாடி ஒன்றாக உறங்கிய
உன் சகோதரங்கள் அண்ணா என்று ஆசையுடன்
உன் கையை எதிர் பார்த்து வாடி இருக்கும் உன்
உண்மை உறவுகளை நீ நினைத்து பார்த்தாயா ,,,

சிங்களமோ திட்டங்களை தீட்டி ஏமாற்றினார்கள்
சட்டங்களை தங்கள் வசமாக்கினார்கள் அந்த
வட்டத்தில் வாழமுடியாத கட்டத்தில் நாடுகளில்
அலைந்து அகதி ஆனோம் இன்னும் நாம் இக்கட்டில்
இருக்கும் உறவுகளுக்கு உதவாமல் இருப்பதன் மாயம் என்ன ,,

பாரம் பரிய வட்டத்தில் வாழ்ந்த நாங்கள்
பாரீஸில் லண்டனில் சூரிச்சில் கனடாவில்
கட்டவிழ்ந்த காளைகளாய் கன்னியர்கள் பின்னாலே
காடையர்கள் உடன் சேர்ந்து சட்டங்களை கூட
மறந்து கடும் சேட்டை செய்வதன் மாயமென்ன ,,

கஸ்ரங்கள் பட்டது போதும் உன் உறவுகள்
காலத்தால் கேட்டது போதும் உன் வாழ்க்கை
காலங்கள் மாறட்டும் கஸ்ரங்கள் ஓடட்டும்
கண்ணீரில் வாழும் சொந்த உறவுகளை நீங்கள்
கருணை காட்டி காப்பாற்றுங்கள் நண்பர்களே ,,!!This free script provided by
JavaScript Kit

4 comments:

 1. இந்த வரிகளில் உங்கள் வேதனையின் ஆழம் தெரிகிறது மேனகை
  இந்நிலை மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை
  இன்னும் உங்கள் படைப்புகளில் புரட்ச்சியை துரித படுத்துங்கள் .
  நான் உங்களுக்கு என் உறுதுணை கலந்த வாழ்த்துகள் .

  ReplyDelete
 2. உங்கள் கருத்துக்கு நன்றி,

  ReplyDelete
 3. விளை நிலமாய் நான் தோய - கனவுடனே
  யான் பாரிஸ் வந்தேன் - உள்ளதோர் உத்தியோகத்தையும் விட்டிழந்து ,,,,!!!
  தாய்க்கு உத்தமனாய் , தனயனுக்கு அற்றானாய் வியந்தியம்பி - வாழ்ந்த
  எனது முகிலில் ஆவலுடன் தேடித் பார்த்தேன் !!
  என் லட்சியத்தின் ஒரு படி நிலை கூட நான் தாண்டவில்லை !!
  அன்னையவள் பூத்த விழியில் கனத்த நீரை சேமித்து வைக்கிறாள் - தன்
  பிள்ளை வீடு வந்து சேருவான் , அன்று தான் நிலையேறுவேன் என நினைத்து !!!
  ஒரேயொரு ஆறுதல் தான் எனக்கு தந்தைக்கு உரிய கடமையை செய்தேன் என்று !!!!!!!

  ReplyDelete
 4. பிறப்பை, வளர்ந்ததை,வாழ்வை, வாழும் நிலையை, நிலைமையையை, இலக்கை நினைத்துப் பாராமையே இத்துண்பத்தின் காரணம். அருமை சிவ மேனகை

  ReplyDelete