Saturday, December 21, 2013

சீர் கெட்ட சிநேகிதி கிடைத்து விட்டால்



சீர் கெட்ட சிநேகிதி கிடைத்து விட்டால் 
சீரான வாழ்கையும்  சில நாட்களில் 
சிதைந்து விட கூரான வாள் தேவையில்லை 
சிகரட் மட்டுமே போதும் உன்னை கருவறுக்க ,,,

சுவையோடு பருகிட விலைஉயர் விஸ்கி 
புகையோடு புன்னகைத்திட சிகரட் 
அவையோடு கைபேசியில் பதிந்திடும் 
அழகினில் மயங்கிடும் உன் அறிவு ,,,,

நிலை தலை மறந்து இங்கே நீங்கள் 
நிற்பதை நினைக்கையில் உருகுது மனது
வரைமுறை தவறிய வாலிப வாழ்க்கை 
தலை முறை தவறிய நண்பர்கள் சேர்க்கை,,,, 

பெண்ணியத்தை பாடி பெருமை சேர்த்த 
பெரும் புலவர்கள்  செய்த புண்ணியத்தால் 
போய்விட்டார்கள் இன்று இருந்தால் உங்கள் 
கண்ணியத்தை பார்த்து கண் கலங்கி இருப்பார்கள்,,,
,,,,சிவமேனகை ,,,

புகை நமக்கு பகை

புகை நமக்கு பகை 


விருப்போடு பற்ற வைத்து
நெருப்போடு உறவாடும் நெஞ்சங்களே
உதட்டோடு யமனை வைத்து
உயிரோடு போராடும் உறவுகளே ,,,

கருவாக்கி உன்னை உருவாக்கி 
மகவாக்கி மடிமீது தாலாட்டிய தாயும்
மனையாகி வந்து மகிழ்வாக்கி உன்னை
உறவாக்கி உணர்வில் கலந்த உறவும் ,,,
தனியாக நின்று நாளை தவிக்க
தரம் கெட்ட தணியாத தாகம் என
உருவாகி வந்து உயிர் கொல்லும்
உதவாத புகை ஆற்றல் தேவையா ,,,,,
,
,,,சிவமேனகை ,,,,,

Friday, December 13, 2013

சிவமேனகை நூலகம் ,,,புத்தக இலக்கம் ,,,05,,,,உன் மனதை தந்துவிடு ,,,,

பிரபல நாவல் ஆசிரியர் ,, முத்துலட்சுமி ராகவனின் ,,உன் மனதை தந்துவிடு ,,,,,என்ற நாவலை வாசகர்களுக்காக எனது இணையத்தில் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் ,,,,நன்றியுடன்  சிவமேனகை ,,,,,
https://docs.google.com/file/d/0B-_DXIOvRUOQb1lJTVhOM2lYQmM/edit


சிவமேனகை நூலகம் ,,,புத்தக இலக்கம் ,,04,,,,வெண்ணிலா நீ எனக்கு ,,,,

பிரபல நாவல் ஆசிரியர் ரமணி சந்திரன் அவர்களின் ,,வெண்ணிலா நீ எனக்கு ,, என்ற நாவலை வாசகர்களுக்காக  எனது இணையதளத்தில் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் ,,,,நன்றி ,,,சிவமேனகை ,,,
https://docs.google.com/file/d/0B-_DXIOvRUOQQWJBVXhydV9FTTg/edit,,,






சிவமேனகை நூலகம் ,,,புத்தக இலக்கம் ,03 ,,,காலங்களில் அவள் வசந்தம் ,,,,,,,

பிரபல நாவல் ஆசிரியர் கவிதா ஈஸ்வரன் அவர்களின் ,,காலங்களில் அவள் வசந்தம்  ,,, என்ற நாவலை வாசகர்களுக்காக எனது இணையதளத்தில் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் ,,,,நன்றி ,,,சிவமேனகை ,,
https://docs.google.com/file/d/0B-_DXIOvRUOQNUNuYWpiVzNpMlk/edit,,,

Thursday, December 12, 2013

சிவமேனகை நூலகம் ,,,,புத்தக இலக்கம் 02 ,,,,பொன்னியின் செல்வன் ,,,,

பிரபல  வரலாற்று  நாவல்  ஆசிரியர்  ,,கல்கி ,, கிருஷ்ணமூர்த்தி எழுதிய  ,,பொன்னியின்  செல்வன்,, என்ற வரலாற்று நாவலை எனது இணையத்தில் வாசகர்களுக்காக பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் ,,,,,,,நன்றியுடன் ,,,சிவமேனகை ,,,,
http://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D,,,



Wednesday, December 11, 2013

சிவமேனகை நூலகம் ,,,,,புத்தக இலக்கம்,, 01 ,,,பூ பூவாய் பூத்திருக்கு ,,,

பிரபல நாவல் ஆசிரியர் ரமணி சந்திரன் அவர்களின் ,,பூப்பூவாய் பூத்திருக்கு,, என்ற நாவலை வாசகர்களுக்காக இணையத்தில் இலவசமாக வாசிக்க உதவும் வகையில் எனது இணையதளத்தில் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் ,,,,நன்றி ,,,சிவமேனகை https://docs.google.com/file/d/0B-_DXIOvRUOQS19seXF4Q3NJRmM/edit....

Sunday, December 8, 2013

இந்த நிலை வந்து சேருமோ ,,,

இந்த நிலை வந்து சேருமோ ,,,,,,,

கட்டிய மனைவியை கவனிக்காது 
கணணியில் கண் விழித்து இருந்து 
கட்டிளம் கன்னியரை தேடுகின்றாயா 
முத்தங்கள் தருவதற்கு நான் இருக்க
முக புத்தகத்தோடு ஏனடா தினமும்
முட்டி மோதி அலைகின்றாய் ,,வாடா ,,வா ,,,,

Saturday, December 7, 2013

அப்பாவின் வரவுக்காக

அப்பாவின் வரவுக்காக 

தந்தை முகம் காண 
தவிக்கிறது பிள்ளை 
உந்தன் விழி நுகர 
துடிக்கின்றது என் உள்ளம் ,,,

எங்கள் நிலை புரிந்தும் 
எங்கே அப்பா சென்றாய் 
முந்தை வினை முடித்து 
விரைவாய் ஓடி வருவாய் ,,,

பாலகியாய் தோள் தாவி 
பாடி திரிந்த உன் மகள் இன்று 
பாவையாகி நின்று எதிர் 
பார்க்கின்றாள் உன்வரவை ,,,

பூக்குட்டியாய் நீ தினமும் 
பூசூடி அழகு பார்த்த அவள் 
புலரும் பொழுதெல்லாம் 
பூவிழியாலே உன்னை தேடுகிறாள் ,,,

தூது வந்து சொன்ன  மாட புறா 
செய்தி  கேட்டு புத்தாடை உடுத்து 
புதுமலர் சூடி  வழிமீது விழி வைத்து 
காத்திருகின்றோம் இன்றாவது வருவாயா ,,,,,!!!
,,,,,,சிவமேனகை ,,,,,,,

Friday, December 6, 2013

நிதர்சனம்

நிதர்சனம் 




மலர் தாவும் வண்டுகளையும் 
மனம் தாவும் மனிதர்களையும் 
நிலம் தாங்க முடியாது 
நிசப்தங்கள் நிகழ்கின்றது உலகில் 

சுகம் காணும் வரை 
நலம் கேட்கும் நடிகர்களை
இனம் காண்பது இன்று
இலகுவாக போய் விட்டது ,,

பலம் இருக்கும் வரை
பகை நடுங்கும் என்பதும்
பணம் இருக்கும் வரை
பாசம் நிலைக்கும் என்பதும்
பலர் வாழ்வில் நிதர்சனமாகி
கொண்டே இருக்கின்றது ,,,,,,,,!

Tuesday, December 3, 2013

விவாகரத்து தேவையா ,,,,,

விவாகரத்து தேவையா ,,,,,

பிரிந்து போகும் வாழ்கையின் சின்னக்குழந்தைகள் 
அழிந்து போகும் வாழ்கையின் அடுத்த தலைமுறைகள் 
பிஞ்சு மனங்களில் விஷ நஞ்சை விதைக்காதீர்கள் 
மழலைகள் கெஞ்சும் உறவுகளே கொஞ்சம் கேளுங்கள்

சின்னக் குழந்தைகள் அழுகுரல் கேட்கலையோ
சீறி பாய்வதன் விளைவினை உணரலையோ 
சிரித்த முகங்களில் சினத்தின் அறிகுறியோ 
சீர்வரிசை திருமணத்தின் பணத்தின் மறுமொழியோ

விவாகரத்து வினையாகும் விபரீதம் அல்லவா
விடைதேடும்விழிகளின்கண்ணீரின் உறைவிடம்அல்லவா 
கணவன் கருணையில் கண் உறங்கிய காலங்கள் 
கனவில் வரும் போது கற்பனையில் நீ வாழ்வதா ,,

இருப்பதை விட்டு வானில் பறப்பதற்கு ஆசையா 
இல்லத்தின் வெளிச்சத்தை அணைத்து இருளை தேடியா 
எண்ணங்களின் கருவினால் ஏமாற்றம் வந்ததா
எதிர் வீட்டு துரோகியால் எல்லைகள் பிரிந்ததா 

சிந்தித்து பாருங்கள் நீங்களும் சிறப்பான தம்பதிகளே 
சின்னக்குழந்தைகளின் உயிரில் கலந்த உறவுகளே  
உல்லாச வாழ்வில் உலகை வென்றவர்கள் நீங்களே  
செல்லாத காசாய் கல்லான மனத்தோடு வாழ வேண்டுமா ,,,,,
,,,,,,,,,,,,,,,,சிவமேனகை ,,,,,,,,,,

உன்னை தேடுதடா

உன்னை தேடுதடா,,,,,

அலைகின்ற அலைகூட
ஆசையாக கால் தழுவுதடா,,,
அணில் குஞ்சு அருகில் வந்து
அன்பாக நலம் கேட்குதடா ,,,,,
அணை போட முடியாத ஆசைகள்
அனுதினம் உன்னை தேடுதடா ,,,,,
 

Monday, December 2, 2013

,,,பாசம் ,,,,,





,,பாசம் ,,,,

தங்கை பாவம் என்று 
தன் பனை ஓலை பாயை 
தந்து விட்டு சீமெந்து 
நிலத்தில் சிரித்துகொண்டு
கண் உறங்கிய அண்ணா ,,,,,

நாள்முழுதும் வேலைசெய்து
தான் கஸ்ரப்பட்டு கட்டிய வீட்டை
தங்கைக்கு சீதனமாக்கி விட்டு
சிறு குடிசை கட்டியவன் இன்று
சிறு குழந்தைகளோடு வாழ்கின்றான் ,,,

புழுதி அழைந்த தேசத்தையும்
புனிதமான உறவுகளையும் விட்டு
புலம் பெயர்ந்து போன 
தங்கை 

புது மாபிள் பதித்து வீட்டை
புதிதாய் ஊர் வந்தவர்களுக்கு
வாடகைக்கு கொடுத்து விட்டாள்,,,
பாசத்தையும் பாயையும் மறந்து
பஞ்சு மெத்தையில் உறங்குகின்றாள் ,,,,,

,,,,,,சிவமேனகை ,,,,,,

எங்கே என் அழகிய தேசம்

மறக்கமுடியுமா ,,,,
எங்கே என் அழகிய தேசம் ,

கருவறையில் எம்மை தாய் 
சுமந்த கற்பகிரகங்கள்
உரு எடுத்த நாட்களில்
உருண்டு விளையாடிய
உன்னத தாய் நிலங்கள்
பசி எடுத்த வேளையில்
பழங்கள் தந்த பழ மரங்கள்
தினவெடுத்த போதெல்லாம்
தோழர்களோடு முட்டி மோதி
தொங்கி விளையாடிய மரகிளைகள்
அம்மை அப்பனை ஏமாற்றி விட்டு
ஆற்றில் குளித்து மகிழ்ந்த
அந்த இனிமையான நாட்கள்
ஏழ்மையிலும் எம்மை
நலம் வாழ வழி காட்டிய
எளிமையான ஆலயங்கள்
ஏடெடுத்து ஒற்றுமையாய்
ஒன்று கூடி கற்றுமகிழ்ந்த
மரநிழல் வித்தியாலயங்கள்
இவை எங்கே எங்கே எங்கே
மாடி வீட்டில் மகிழ்ச்சி அற்ற
ஏழையாய் வாழ்வதை விட
ஓடி விளையாடி ஆடி பாடி
கூடி தினம் கூழ் குடித்து
குதுகலமாய் குடிசையில்
வாழும் சுகம் தேடுகின்றேன்
எங்கே என் அழகிய தேசம் ,,,,,,

,,,,,,சிவ மேனகை,,,,,,

ஆலய மணி ஓசை கேட்குமா ,,,ஆன்மீக தலங்கள் எம்மை அழைக்குமா ,,,,,,,

ஆலய மணி ஓசை கேட்குமா ,,,ஆன்மீக தலங்கள் எம்மை அழைக்குமா ,,,,,,,

அன்னை மண்ணில் தவழ்ந்த அந்த நாட்களில் வீட்டில் சாப்பிட வழி இல்லாத காலத்தில் கோவில் மணி அடித்தால் எமக்கு சிறு வயதில் வரும் சந்தோசத்தை நினைத்து பாருங்கள்,,,,,,,,ஏழைகள் ஒருகாலத்தில் கோவில் பிரசாதங்களில் வளர்ந்தார்கள் ஒரு வேளை உணவாவது உண்டார்கள் ,,,இன்று அந்த நிலை இருக்கா ,,,,,,கோவில்களில் பொங்கல் செய்து கோவில் வரும் குழந்தைகளுக்கு வருபவர்களுக்கு உணவு கொடுகின்றார்களா ,,,,,,எம் முன்னோர்கள் வகுத்தார்கள் ஒரு நெறி கோவில்களில் செய்யும் பிரசாதத்தை கோவிலுக்கு வருபவர்களுக்கு பகிர்ந்து உண்ண கொடுக்க வேண்டும் வீட்டுக்கு எடுத்து செல்ல கூடாது என்று சொன்னார்கள் வீட்டுக்கு எடுத்து சென்றால் பாவம் என்றும் சொன்னார்கள் ,,,எஞ்சிய உணவை பட்சிகளுக்கும் பசுக்களுக்கும் கொடுங்கள் என்றும் கூறினார்கள் ,,,இதை இன்று யார் செய்கின்றார்கள் ,,,இன்று பணக்கார கோவில் நிர்வாகிகள் வீட்டு பிள்ளைகளும் ,உபயகாரர் உறவினர்களும் மட்டும் தான் வண்டிலில் காரில் ஆட்டோவில் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு போய் சாப்பிடுகின்றார்கள் ,,,,,,இதை அவர்கள் வீடுகளில் செய்தே வழமை போல் சாப்பிடலாமே ,,,,,ஆனால் தங்கள் திருவிழா நாங்கள் பொங்கல் செய்தோம் என்று புகழ் பெறுவதற்கே இன்று பலர் கோவில்களில் விழா எடுக்கின்றார்கள் ,,,,,,,,,,,

ஏழைகளுக்கு அன்னம் இடுவதற்காக உருவாக்கப்பட்ட அன்னதான மடங்கள் ஊர் உலகம் முழுக்க மக்கள் காசை பறித்து வங்கிகளிலும் ,நிர்வாகிகள் தங்கள் சொந்த முதலீடுகளிலும் புரள விட்டு விட்டு ,தண்ணீரை கலக்கி சாம்பாராக மாற்றி அன்னத்தின் மேல் தெளித்து ஏழைகளுக்கு வழங்கி விட்டு நாங்கள் அன்னதானம் கொடுத்தோம் என்று புகழ் பேசுகின்றார்கள் .எங்கள் மூதாதையர் ,நெல்லில் இருந்து காய்கறிகள் வரை தங்களால் இயன்ற பொருட்களை மனமுவந்து வழங்கி தங்கள் உடல் உழைப்பை வழங்கி எல்லோருக்கும் பொதுவாக நிழல் அமைத்து ஒரு தொண்டாக ஏழைகளுக்கு பசியாற நிறைவாக உணவளித்தார்கள் ,,இதுவே ஆத்மாவின் தாகம் தீர்த்த அன்னதானம் ,,,,ஆனால் இன்று அன்று நற்பணி செய்த எம்முன்னோர்கள் பெயரை புகழ் பெயராக சொல்லி கொண்டு எம்மவர்கள் இன்று பொதுவான அன்னதான மடங்களில் vip முக்கிய பிரசித்தி வாய்ந்த மா மனிதர்களுக்கு என்று தனியாக ஒரு கட்டிடம் கட்டி அதற்குள் உயர்ரக விருந்து கதிரை மேசை போட்டு உபசாரம் ,,,இதன் பெயர் அன்னதானமா இல்லை மனித சமத்துவத்தை சீர்குலைக்கும் ஆன்ம துரோகமா,,,,,ஆலயங்கள் எம்முன்னோர்கள் சமத்துவத்தை பேணும் நோக்கத்திலேயே ஆரம்பித்தார்கள்,,,அவற்றை போதிப்பதற்கே பாடசாலைகளுக்கு வித்தியாலயங்கள் என்றும் பெயர் சூட்டினார்கள் ,,,,,,,,வசதிகள் இன்று வழக்கத்தை மாற்றி அமைத்துவிட்டது .நெறிகள் இன்று மனித நேயத்தை மனித சமத்துவத்தை மறந்து நிற்கின்றது,,,,,ஏழைகளை வாழவைத்து சமத்துவத்தை ஏற்படுத்த எம்முன்னோர்களால் உருவாக்கபட்ட ஆலயங்கள் .புனிதமான மடங்கள் இன்று .மூட நம்பிகைகளை புகுத்தும் சாமிகளின் கைகளிலும் தங்கள் சுயவாழ்வை வளம்படுத்தும் பண முதலைகள் கைகளிலும் அகப்பட்டு இருக்கிறது ,,,,,இவர்கள் கைகளில் இருந்து விடுபட்டு ,,உண்மையான நெறியில் சரியான பாதையில் மக்களை நெறிப்படுத்த ஆலய மணியோசை மீண்டும் கேட்குமா ,,,,ஆன்மீக தலங்கள் எம்மை அழைக்குமா ,,,,,,,,,,,,,
சிவ மேனகை ,,,,

ஈழத்தின் பூர்வீக துறைமுகம் ,,,,,,,,,நயினாதீவு ,,,,

ஈழத்தின் பூர்வீக துறைமுகம் ,,,,,,,,,நயினாதீவு ,,,,,,

இந்து மாகடல் அலை வந்து மோதிடும் இனிய தீவு 
வந்து பாருங்கள் வாழ்வை வெல்லுங்கள் ,,சென்று ,,
மீண்டும் வாருங்கள் என்றழைக்கும் அதன் சிறப்பு ,,,

நயினாதீவு என்ற இந்த குட்டி தீவு ஏன் இலங்கையில் எந்த ஒரு இடத்துக்கும் இல்லாத அளவுக்கு அனைத்து புராண, இதிகாச, இலக்கியங்களோடும் வரலாற்று சான்றுகளோடும் தொடர்பு பட்டு இருக்கிறது .அதற்கான காரணம் என்ன என்ற இந்த கேள்வி .உலக அளவில் அனைத்து தமிழர்களிடமும் இருக்கிறது .

1,ஆதி சக்தியின் சக்தி பீடமான புவனேஸ்வரி பீடம் இங்கு அமைந்து இருப்பது அனைவரும் அறிந்த வரலாற்று சான்றாக இருக்கிறது .அந்த ஆலயம் இன்றும் மிகவும் பொலிவோடு இருக்கிறது .

2,ஈழத்தின் பூர்வீக துறைமுகம் ,
அந்த துறைமுகம் நயினாதீவில் இருந்து அழிந்து அதன் அடையாளங்கள் இன்று இல்லாமல் இருந்தாலும் அதற்கான வரலாற்று சான்றுகளை ஆராய்ந்து உறுதிபடுத்த வேண்டியது எங்கள் கடமை ஆகின்றது .

இந்த துறைமுகத்தை சம்புகோவளம், ஜம்புகோளம், சம்புக்கல், சம்புத்துறை என்று பல்வேறு பெயர் கொண்டு வரலாற்றில் அழைக்கபட்டு இருக்கின்றது .கந்த புராணத்தில் சம்பு என்கின்ற இடம் இன்றைய நயினாதீவு என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது .அந்த புராண காலத்தில் சம்பு ஒரு தீவாக இல்லாமல் யாழ்பாணதோடு இணைத்து இருந்ததால் தீவு என்ற சொல் அங்கு பாவிக்கப்படவில்லை .இந்த சம்பு என்ற இடத்தில் தான் ஈழத்தின் பூர்வீக துறைமுகம் இருந்து இருக்கிறது .இந்த சம்பு என்ற பெயரை வைத்தே யாழ் தீபகற்பத்தை சம்புகோள பட்டிணம் என்று அழைத்தார்கள் .ஆனால் சம்பு கோள பட்டிணம் என்பது யாழ் குடாநாட்டை குறித்தாலும் ,சம்பு என்பது இன்றைய நயினாதீவை மட்டுமே குறிக்கும் என்பது உறுதியானது .அதற்கு ஆதாரமாக ஏனைய இன்றைய 6 தீவுக்கும் யாழின் ஏனைய பகுதிகளுக்கும் கந்தபுராணத்தில் வேறு பெயர்கள் குறிப்பிடபட்டு உள்ளது .இதில் இருந்து துறைமுகம் இன்றைய நயினாதீவின் பகுதியில் இருந்து இருக்கிறது என்பது உறுதியாகின்றது .

பிரதேசவாத நிலை பேசும் சில இன்றைய சில எழுத்தாளர்கள் இந்த துறைமுகம் ,மாதகலுக்கு பக்கத்தில் இருந்தது என்றும் ஊர்காவற்றுறையில் இருந்தது என்றும் ,சிலர் எழுதி இருக்கின்றார்கள் .அவர்கள் யாராவது சம்பு நகர் இன்றைய நயினாதீவின் அகத்தில் இருக்கவில்லை அல்லது ஈழத்தில் வேறு பகுதியை குறிக்கும் என்று யாராவது உறுதிபடுத்துவார்களா,,,,

இந்த துறைமுகம் நயினாதீவில் எந்த இடத்தில் இருந்தது என்பதை பற்றி ஆராய்ந்து பார்ப்போமானால் அது இருந்ததாக உறுதியாக நம்பப்படும் இடம் .இன்றைய பிடாரி அம்பாள் ஆலயத்துக்கும் கங்காதரணி தீர்த்த கரைக்கும் இடைப்பட்ட பகுதியாக கருதப்படுகின்றது .அதாவது இன்றைய கத்திய குடா அதற்கான முதன்மையான ஆதார சான்று .அதற்கு மிக அண்மித்த மக்கள் வசிக்கும் காணிகளுக்கு சிறிது காலத்துக்கு முன் வரை உறுதி இல்லை ,அரச சொத்தாக கருதப்பட்டு இருந்தது ,ஏனைய அந்த பகுதி சார் .வீட்டு காணி உறுதிகளில் கப்பல் கிடந்தான் என்ற பெயர் குறிப்பிடபட்டு உள்ளது .

வரலாற்று தொடர்புகளை வைத்து பார்ப்போமானால் பூர்வீக காலத்தில் இன்று நாம் தில்லைவெளி என்று அழைக்கும் பிடாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த பகுதி ஒரு பெரிய நந்தவனமாக இருந்து இருக்கிறது .இங்கிருந்து தில்லை சிதம்பரத்துக்கு விசேஷமாக அலரி மலர் எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது .புராதன காலத்தில் தில்லை சிதம்பரதொடு நேரடி தொடர்புகளை கொண்டு இருந்ததால் பிற்காலத்தில் கடல் அழிவுகளால் வெளி பிரதேசம் ஆன பின்னும் என்றும் அழியாத அந்த தில்லை என்ற பெயர் கொண்டு இன்றும் தில்லைவெளி அழைக்கபடுகின்றது .இங்கு சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதிகமான அலரி மரங்கள் நின்றதாக இன்று எம்மோடு இன்றும் வாழும் எம் முதாதையர் சான்று கூறுகின்றனர் .

கந்த புராணத்தில் சூரனுடன் சமாதானம் பேச வந்த வீரவாகுதேவர் நயினாதீவு இறங்கு துறைக்கு தனது பரிவாரங்களுடன் வந்து .தாய் தெய்வத்திடம் ஆசிபெற்று மகேந்திரமலைக்கு பயணம் செய்ததாக புராண வரலாறுகள் சொல்கின்றது .

மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டும் போருக்கு தங்கள் பக்கம் துணைவர் சேர்க்கவும் ,அஸ்வமேத யாக குதிரையை தேடியும் இங்கு பல முறை வந்ததாகவும் இதிகாச கதைகள் இருக்கிறது .

புத்தபெருமான் வந்தது சங்கமித்தை வந்தது ,போன்ற சிங்கள வரலாறு கூறும் சில நூல்கள் மேற்கோள் காட்டுகின்றது இவர்களும் இந்த துறைமுகத்தின் மூலம் வந்து இருக்கலாம் என்று கருத இடமுண்டு
புராண இதிகாச கதைகள் புனைவுகள் என்று பலர் கருத்து கூறினாலும் சம்பவ இடங்களுக்கு ஒரு வரலாற்று நிகழ்வுகளோடான உண்மை கதை இருப்பது உறுதியானது .என்பதை உறுதிப்படுத்த மேலும் பின்வந்த இலக்கியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பியங்களும் நயினாதீவோடான வரலாற்று தொடர்பை தெளிவாக எடுத்து சொல்கின்றது .

பெரும் வணிகனான மாநாயக்க செட்டி இந்த இடத்துக்கு வணிக நோக்கங்களுக்காக இங்கு பலதடவை வந்து இருக்கின்றார் .கோவலன் இரண்டாவது மனைவி மாதவி புராதன காலத்தில் இங்கு நடக்கும் இந்திர விழாவுக்கு நடன மாதாக தன்னுடைய குழுவினரோடு வந்த வேளை சிறுமியாய் அவர்களோடு வந்த அவள் மகள் மணிமேகலை இந்த துறைமுகத்தில் இறங்கியதும் சன நெருக்கத்தில் தாயை தவற விட்டு அழுது கத்திய இந்த பகுதியில் உள்ள இடைத்தையே நாம் இன்று கத்தியாக் குடா என்று அழைக்கின்றோம் .

இந்த துறைமுகம் இயற்கையான தொடுதளமாக ஆரம்பத்தில் இருந்து இருக்கலாம் என்றும்,பின்னர் மன்னார் மாதோட்ட துறைமுகத்தையும் சேது அணையையும் கட்டியதாக வரலாற்றில் அறியப்படும் விஸ்வகர்மாவின் பிள்ளைகளான மயனும் நளனும் இந்த துறைமுகத்தை புனரைமைத்து சிறப்பாக கட்டி இருக்கலாம் .என்ற கருதுகோளும் இருக்கிறது .

காலத்துக்கு காலம் வந்த கடல் அழிவுகளால் இதன் பகுதிகள் அழிவடைந்த போதும் காலத்துக்கு காலம் ஈழ நாட்டை ஆண்ட மன்னர்களால் புனரமைக்கபட்டு பல நூற்றாண்டுகளாக பாவனையில் இருந்த இந்த துறைமுகம் 10 நூற்றாண்டு வரை பாவனையில் இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது .

வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் கருத்துக்களின்படி அண்ணளவாக கி மு 200 /300 களில் அதாவது தொண்டமான் இளம் திரையன் காலத்தில் ஏற்பட்ட கடல் கோளில் இந்த துறைமுகம் மிகப்பெரிய கடல் அழிவுக்கு உள்ளாகியது என்றும் இதன் பொழுதே தீவுகள் தனித்தனியாக பிரிந்தது என்றும் .பின்னர் கி. பி 10காலம் வரை வணிக தேவைகளுக்காகவும் ,கப்பல்கள் கட்டும் துறைமுகமாகவும் முத்துக்குளிக்க வருபவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கட்டி வைக்கும் துறைமுகமாகவும் பயன்படுத்தபட்டதாக கூறுகின்றார்கள்.

ஆரம்ப காலத்தில் மிக சிறந்த பயணிகள் மற்றும் வணிக துறைமுகமாய் விளங்கி இருக்கிறது கத்திய குடா வில் இருந்த துறைமுகம் தில்லை சிதம்பரம் மற்றும் காவிரி பூம் பட்டினத்துடனான தொடர்பு மௌரியர்குடனான தொடர்பு ,,அரபு நாட்டில் இருந்து எல்லாளன் குதிரை வருவித்தது .மாநாயக்க செட்டி நாக ரத்தினங்களையும் முத்து மணிகளையும் பெறுவதற்கு வந்தது போன்ற சம்பவங்களையும் ஏனைய வரலாறுகளையும் வைத்து பார்க்கும் போது அது உறுதியாகின்றது. பிற்காலத்தில் கப்பல்கள் பழுது பார்க்கும் தண்ணீர் எண்ணைகள் தேவையான பொருள்களை மாற்றும் இடமாக இருந்ததாகவும் பல்வேறு வரலாறுகள் உண்டு .மேலும் கப்பல் கிடந்தான் என்று இந்த பிரதேச இடத்தை அழைப்பதில் இருந்து இந்த இடத்தில் பல கப்பல்கள் தரித்து இருக்க கூடிய வசதி இருந்தது என்பதை விளங்கி கொள்ள முடிகின்றது .

.இந்து சமுத்திரத்தின் நீரோட்டத்தில் இந்த கத்திய குடா பகுதியின் அமைவிடத்தை அறிந்தவர்கள் மனக்கண்ணில் நினைத்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் எளிதாக புரியும் .
.
சோழர் வரலாறு கூறும் இலக்கியங்களும் எம்மவர்கள் பிற்காலத்தில் எழுதிய இலக்கிய வரலாற்று நாவல் பொன்னியின் செல்வன் , மற்றும் யலதீபம் ,கடல்புறா ,போன்றவையும் இந்த துறைமுகத்தின் வரலாற்று தொடர்புகளை எடுத்து கூறுகின்றன .

உலகத்துக்கு நாகரீகத்தை கற்று கொடுத்த நாகர்கள் வாழ்ந்த இந்த தீவில் இருந்த துறைமுகம் தெற்காசிய நாடுகளுக்கும் அரேபிய நாடுகளுக்கும் இடையேயான கடல் போக்குவரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக ஒரு காலத்தில் இருந்து இருக்கின்றது .

புகழ் பூத்த புண்ணிய பூமியான இந்த தீவில் அமைந்து இருந்த இந்த துறைமுகம் இன்று இல்லாவிட்டாலும் அது வரலாற்றில் ஆற்றிய பெரும் சேவை நயினாதீவு என்ற இந்த குட்டி தீவு உலக அளவில் பெயர் பெற ஒரு காரணமாய் இருந்தது என்ற கூற்றை யாரும் மறுப்பதற்கு இல்லை .

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டோல் தாயே உன்னை என்றும் மறவாத மழலையாய் இதே நயினை மண்ணில் பிறக்கும் வரம் வேண்டும் என்று ஒவ்வொரு நயினை மைந்தர்களும்
சொல்லும் அளவுக்கு ஆதி சக்தி அருள் பாலிக்கும் அற்புத பூமியும் ஆதிகால வரலாறு கூறும் அன்னை மண்ணும் அந்த வரலாற்றை அங்கு நிறுவி மறைந்த துறைமுகமும் எங்களை சொல்ல வைக்கின்றது .
,, ,,,,,,,நன்றி வணக்கம் ,,,சிவமேனகை,,,