Tuesday, April 5, 2011

உயிரில் கலந்த உறவு


சென்னை மருத்துவமனையில் நிலா கண்விழிக்கும் வேளைக்காக ஒரு நிமிடம் கூட உறங்காமல் அந்த நள்ளிரவு நேரத்தில் காத்திருந்தான் சிவா ,,,தூக்கம் கண்ணை கட்டினாலும் துக்கம் நெஞ்சை வருடியதால் அவள்கால்களை தலையை தடவியவாறே அவன் மனக்கண்ணில் அந்த நாட்களில் நினைவுகளில் தன்னை மறந்து உலா வந்தான்

சிறிய கிராமம் தான் அவனது ஊர் கோயில்கள் பாடசாலைகள் வைத்தியசாலை என சாதாரண வசதிகள் உள்ள ஊர் அது அங்கு ஆசிரியர்களாக தொழில் புரிந்த அம்மா அப்பாவுக்கு ஒரே செல்ல பிள்ளைதான் சிவா .நடுத்தர குடும்பம் அவர்களுடையது ஊரில் கௌரவமாக வாழ்ந்த குடும்பம் என்று சொன்னால் மிகையாகாது. இளமை பிராயத்தில் இருந்தே துடினமும் கெட்டித்தனமும் உள்ள சிறுவன் சிவா எல்லாத்துறைகளிலும் மிகவும் சாதுரியமானவனாக இருந்தான் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில்பரிட்சையில் பாசாகினான் பெற்றவர்கள் அவனின் எதிர்காலத்தை தம் வாழ்கையில் குறிக்கோளாக கொண்டு யாழ் இந்து கல்லூரியில் சேர்த்து சிவாவின் தந்தையுடன் கலாசாலையில் படித்த ஒரு நண்பரின் வீட்டில் தங்கும் வசதியும் செய்து கொடுத்தார்கள் நண்பன் வீட்டிலும் சிவா போன்று துடிப்புமிக்க கேட்டிதனமுள்ள மகன் இருந்தான் அவன்தான் வினோ அவனது அன்பு தங்கை தான் நிலா

சிவாவும் வினோவும் நாளடைவில் இனிய நண்பர்கள் ஆனார்கள் படிப்பிலும் விளையாட்டுக்களிலும் அவர்களிக்கு நிகர் அவர்களே நன்றாக ஒற்றுமையாக இருவரும் சேர்ந்து படித்தார்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவார்கள் தங்கைக்கும் பாடம் சொல்லி கொடுப்பார்கள் தங்கையும் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று வேம்படி மகளிர் கல்லூரியில் சேர்ந்து படித்தாள் பெற்றவர்களும் பிள்ளைகளின் படிப்புக்கு நன்றாக உதவினார்கள் வினோவின் பெற்றவர்கள் சிவாவை நன்றாக கவனித்தார்கள் இடை இடை சிவாவின் அம்மா அப்பாவும் வந்து பார்த்துவிட்டு போனார்கள் இவ்வாறு காலங்கள் கடந்தன சிவாவும் வினோவும் சாதாரண தர பரீட்சையில் அனைத்துபாடங்களிலும் அதிதிறமை சித்தி பெற்றார்கள் பலரது பாராட்டையும் பெற்றார்கள். பெற்றவர்களும், மகிழ்சிக்கடலில் மூழ்கினார்கள் இருவரும் விஞ்ஞான துறையினை தெரிவு செய்து ஆர்வத்துடன் படித்தார்கள்

சிவாவின் ஊரில் கோவில் திருவிழா வந்தது அந்த திருவிழாவுக்கு வினோ குடும்பத்தினரை ஒவ்வொரு முறையும் சிவா அழைத்து போவான்
இம்முறை வினோவின் தாய்தந்தையரால் தவிக்கமுடியாத காரணத்தால் போக முடியவில்லை வினோவும் நிலாவும் சிவாவுடன் போனார்கள்
இந்த பத்து நாட்களும் அவர்களுக்கு ஒரு இனிமையான சுற்றுலா போலவே இருந்தது ஊரில் ஊர் வம்பு பேசுபவர்கள் என்றைக்குமே காரணம் தேடிக்கொண்டு இருப்பார்கள் அவர்களுக்கு இந்த முறை சிவாவையும் நிலாவையும் இணைத்து கதைக்கும் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது பொய்யை உண்மையாக புனையும் அசாத்திய திறமை உடையவர்களும் அங்கு இருந்தார்கள் என்று சொன்னாலும் பொருந்தும் அந்தவகையில் பல காரண காரியங்களை புனைந்து பலகாதுகளுக்கு இவர்கள் இருவரும் காதல் என்ற கட்டுகதையை அவிட்டு விட்டார்கள் (அதுவே அவர்களுக்கு காதல் உருவாக காரணம் ஆனதும் உண்மைதான் அவர்கள் வயது அப்படி )சிவாவின் சிறுவயது நண்பர்கள் நிலாவின் காதுக்கு கேட்கும் படி நேரடியாகவும் கேலி செய்தார்கள் நிலாவின் இளமனது தனக்குள்ளே ஆசை என்ற அசைவுகளின் வழியில் அலைபாய்ந்து விடை தேடியது சிவாவுக்கும் மனதளவில் விருப்பம் இருந்தாலும் சில காரணங்களால் மறைக்கும் வழியில் தன் புலன்களை செலுத்தினான் ஆனால் அவர்கள் இதயம் ஒருவரை மற்றவர் எண்ணி துடித்ததால் நாளடைவில் கண்ணியமான காதல் உருவானது இருவரும் யாருக்கும் பாதிப்புவராமல் அன்புலகில் பறவை ஆனார்கள் சில நாட்களில் கடவுள் அவர்கள் சிறகை வருந்தத்தக்க இழப்பின் மூலம் பறக்க முடியால் செய்துவிட்டான்

அந்தவேளையில்தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவானது ஜெயவர்த்தனாவின் மாயவலைக்குள் விழுந்து காந்தி பிறந்த மண்ணில் பிறந்த ராஜீவ் காந்தி அமைதி படை என்ற ரீதியில் அநியாயப்படையை அனுப்பி வைத்தது விடுதலை புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் ஈழ வரலாற்றில் மறக்க முடியாத இந்த போர் மூண்டது அந்த போரில் ஒரு தாக்குதலில் அகப்பட்டு வினோ நிலாவின் தாயும் தந்தையும் உயிர் பிரிந்தார்கள் செய்தியறிந்த பிள்ளைகள் துடியாய் துடித்தார்கள் சிவாவும் தாங்கமுடியாத வருத்தத்துடன் தவித்தான் உறவுகள் கூடி அழகூட முடியாத அவசர காலநிலை இருந்தாலும் சில உறவுகள் ஒன்று சேர்ந்து இறுதி கடமைகளை செய்தார்கள் இறுதிகடமையில் சிவா வின் பெற்றவர்களும் கலந்து கொண்டார்கள் இறுதிகடமை செய்த வினோ தங்கையை முத்தம் இட்டு அழுதவன் சிறிது நேரத்தின் பின்னர் காணவில்லை அவன் இந்த கொடூரமான செயலை தாங்க முடியாமல் விடுதலை புலிகளுடன் சேர்ந்து விட்டதாக செய்தி மட்டும் வந்தது யாரும் ஒன்றுமே செய்ய முடியாத நிலை சிவாவின் பெற்றவர்கள் நிலாவையும் சிவாவையும் யாழ் நிலைமை மிக மோசமாக இருப்பதான் எண்கள் ஊருக்கு கூட்டி போவதாக கூறினார்கள் நிலாவின் மாமா நாங்கள் நிலாவை பார்க்கின்றோம் நீங்கள் சிவாவை கூட்டிக்கொண்டு உடனே ஊருக்கு போங்கள் அல்லது இவனும் இயக்கத்துக்கு போய் விடுவான் என்று எடுத்து சொன்னார்கள் சிவாவின் பெற்றவர்கள் நிலாவுடனும் உறவுகளிடமும் விடைபெற்று சிவாவை அழைத்துக்கொண்டு போனார்கள் அன்று நிலாவை கட்டியழுது பிரிந்த சிவா இன்று அவள் அறியாமலே அவள் தலையை தடவி விட்டுக்கொண்டு இருக்கின்றான்

ஊருக்கு போனவுடன் சிவாவின் அப்பா அம்மா சிவாவை வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்து உடனே அதற்காக தனது நகைகள் அனைத்தையும் கொடுத்து உறவுகளிடம் அவசரமாக கடனும் பெற்று ஒருவழியாக கண்ணுக்குள் வைத்து இருந்து சுவிஸ் நாட்டுக்கு முகவர் மூலம் அனுப்பிவைத்தார்கள் சிவாவுக்கோ நண்பன் வழியில் போகவேண்டும் சிங்கள இந்திய ராணுவத்தை எதிர்த்து ஏதாவது தானும் செய்ய வேண்டும் என்ற துடிப்பு அவனுள்ளே அதற்கு வினோ போன அடுத்த நிமிடத்தில் இருந்து பெற்றவர்கள் சாதுரியமாக தடை செய்து சுவிஸ் அனுப்பிவிட்டார்கள்
இருந்தாலும் அவன் இங்கு வந்து வேலை செய்து களத்தில் நின்றவர்களின் கரங்களுக்கு வலு சேர்த்தான் அதுவும் செய்ய வேண்டிய முக்கியமானதொன்று என காலப்போக்கில் தன்னையும் புலம் பெயர்நாட்டில் இருந்து செயல் படும் புல்லு தின்னாதவனாகவே வாழ அர்ப்பணித்தான்
இடை இடை நிலா நினைவுகள் வந்துவாட்டும் அந்த வேளைகளில் உருக்கமான வரிகளில் கடிதம் எழுதுவான் அவளும் சோகங்கள் வாழ்வாகி போனதால் அதே வகையில் பதில் போடுவாள் அவள் தொடர்ந்து படித்து மருத்துவ துறையில் இறுதி படிப்பு படித்துக்கொண்டு இருந்தாள் அண்ணன் வினோ ஒரே ஒரு தடவை வந்து பார்த்ததாகவும் சிவா பெற்றவர்கள் பலதடவை வந்து பார்த்ததாகவும் கடிதங்களில் எழுதுவாள் இப்படி நாள் நகர்ந்து கொண்டு இருக்க சந்திரிகா அரசின் சிங்கள ராணுவத்துடனான போரில் மருத்துவ வசதிகள் இன்றி பல போராளிகள் உயிர் இழப்பதை பலவழிகளில் அறிந்தாள் அந்த வேளையில் தன் அண்ணன் போன்ற பல அண்ணன்கள் உயிர் முறையான மருத்துவம் இல்லாமல் பிரிவதற்கு தான் ஏன் உதவக்கூடாது என்று நினைத்து தன்னையும் போராட்டத்தில் இணைக்கின்றாள் இணையும் முன் சிவாவுக்கும் கடிதம் மூலம் விபரமாக தெரிவிக்கிறாள் சிவாவும் பரந்த நோக்கில் விடயங்களை விளங்கி கொள்பவனாக இருந்ததால் அவள் செயலை தடுக்கவும் இல்லை போராட்டத்தில் இணைந்த நிலா தனக்கு ஏதாவது நடந்தால் சிவாவுக்கு தகவல் சொல்லும் படி விபரம் தெருவித்து இருத்தாள் அவள் போராட்டத்தில் இணைந்த நாளில் இருந்து கடும் சண்டைகள் நடந்ததால் பலர் காயங்களுக்கு உள்ளாகினார்கள் அவள் அண்ணன் வினோ போராளிஆனபின் ஒருமுறை கண்டபின் இதுவரைக்கும் காணவில்லை தானும் போராளி ஆனது கூட அண்ணனுக்கு தெரியாது ஒரு கடும் சண்டையில் காயப்பட்ட பலருக்கு அவசர வைத்திய பிரிவில் இவள் வைத்தியம் செய்துகொண்டு பரிவாக காயப்பட்ட போராளிகளை கவனித்து கொண்டு இருந்தாள் இந்த இடத்தில கடுமையாக காயப்பட்ட ஒரு போராளி நிலா நிலா என்று கூப்பிடும் குரல் கேட்டு திரும்பி பார்க்கின்றாள் அவளுடைய அண்ணன் பலத்த காயங்களுடன் படுக்கையில் கிடந்தான் தன் கலங்கிய கண்களை துடைத்தவாறு ஓடிப்போகிறாள் அவனுக்கு அவசர சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்கின்றாள் வினோவின் அணியினர் எங்கள் ,தளபதியை காப்பற்றுங்கள் அண்ணனை காப்பற்றுங்கள் என்று அழுகுரல்களேடு மன்றாடுகின்றார்கள் (நிலாவின் அண்ணன் என்பதை அறியாமல் ),,,கடுமையான முயற்சி செய்தும் அவனை அவளால் காப்பற்ற முடியவில்லை
அவன் இறுதியில் அவளுக்கு கூறிய வார்த்தை நான் மட்டும் உனக்கு அண்ணன் இல்லை போராளிகள் அனைவரும் உன் சகோதரங்களே என்று கூறி அவள் மடியில் தலை சாய்த்து உயிர் விடுகின்றான்

நிலா பல அண்ணன் தம்பிகள் உயிரை காப்பாற்றி இருக்கின்றாள் பல அக்கா தங்கை உயிரை காப்பற்றி இருக்கின்றாள் ஆனாலும் தன் அண்ணனை காப்பாற்ற தன் மருத்துவம் உதவவில்லை என எண்ணி மனம் வருந்துவாள் சோர்ந்து போவாள் இருந்தாலும் அண்ணனின் கடைசி வார்த்தை அவன் முன்னே பல உறவுகளை காட்டியதால் தொடர்ந்தும் மருத்துவ சேவை செய்தாள் ஒருமுறை களத்தில் காயப்பட்டவர்களுக்கு களத்திலேயே நின்று சேவை செய்த நிலா விமானத்தாக்குதலில் கடுமையாக காயப்பட்டு ஈழத்தில் வைத்தியம் செய்ய போதிய மருந்துகள் இல்லாததால் தலைமை முடிவெடுத்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள் நிலா முன்னமே தனக்கு ஏதாவது நடந்தால் சிவாவுக்கு அறிவிக்கும் படி கேட்டு இருந்ததாலும் சிவாவை பலவழிகளில் தலைமை ஒரு செய்யல்பாட்டலராக இனம் கண்டு இருந்ததாலும் உடனே அறிவித்தார்கள் சிவாவும் செய்தி அறிந்தவுடன் இந்தியா வந்து அவள் அவசர சிகிச்சைக்கு தேவையான முழு இரத்தத்தையும் தானே கொடுத்து அவன் கண் விளிக்கும் தருணத்துக்காக காத்திருக்கும் சிவா தான் கரங்களை கண்விழித்து தடவும் தன் நிலா வின் முகத்தை பார்கிறான் அவளோ அவன் விழியில் வழியும் கண்ணீரை துடைத்து " தமிழன் அழக்கூடாது" என்று சொல்கின்றாள் ,,,,,,,,,,அவன் உயிரோடு கலந்த உறவாக,
This free script provided by
JavaScript Kit

1 comment:

  1. நிலாவின் "தமிழன் அழக்கூடாது"!வினோவின் "நான் மட்டும் அண்ணணில்லை அனைவரும் அண்ணண்மார்களே"!!!இருவரின் வாக்கும் உரக்கப்பேசுகிறது,பேசட்டும்!!!!!

    ReplyDelete