Monday, April 18, 2011

கண்ணானவன்

missing you...


கண்கவர் பதுமையான இவள்

கவர்சியிலே தனை இழந்தான்
மனக்கண்ணில் இவள் நினைவு
மகுடம் ஆகி விட்டதனால் ,,,,,,,

காதலுக்கு கண் இல்லை என்று

கவி அரசர் சொன்னது போல்
பார்வை அற்ற பெண்ணவளை
பார்த்தவுடன் காதல் கொண்டான் ,,,

பார்வை இல்லை என்று சொல்லி

பாவை அவள் மனம் மிக உருகி
நேசித்தவன் நேசம் அதை
யோசிக்க வேண்டும் என்றாள்,,

கடைசிவரை கவனமாக என்னை

காப்பாற்று வீர்கள் என்றால்
கருணை உள்ள உங்களை
கணவனாக ஏற்பேன் என்றாள்,,,

உருகி நின்ற உண்மை காதலால்

உலகை வென்றவன் போல்
அருவியாய் கண்ணீர் சிந்தியவளை
அரவணைத்து ஆறுதல் சொன்னான் ,,,,

இரக்க குணம் கொண்டவனோ

இதயத்தை பறி கொடுத்து விட்டதனால்
உறக்கம் இன்றி அவள் நினைவில்
உலவு கின்ற வேலை தன்னில்,,,

தயக்கம் இன்றி ஒரு முடிவை

தானாகவே எடுத்து விட்டான்
தான் ரசிக்கும் உலகத்தின் பேரழகை
தன்னவளும் ரசிக்க வேண்டும் என ,,

தன்கண்ணை அவன் தானம் செய்து

தரணியை அவள் பார்க்க செய்தான்
கண்ணான காதலிக்கு கனிவுடனே
கண் காதல் பரிசு அளித்தான் ,,,,,

மனக்கண்ணில் அவள் இருக்க

மண மாலை காத்து இருக்க
சுபமான நாள் ஒன்று பார்த்திருக்க
சுமதி வாயில் ரணமான பதில் வந்ததையா ,,

உனக்கும் கண் பார்வை இல்லை என

ஏன் எனக்கு சொல்ல வில்லை
கண் பார்வை இல்லாத உன்னை கணவனாக்கி
கஸ்ரத்தில் நான் விழ விரும்ப வில்லை ,,,

கண்ணானவளே என்னை நீ மறந்து விட்டாய்

ஏளனமாக்கி ஏமாற்ற நினைத்து விட்டாய் -ஏன்
கண்ணை ஆவது கடைசி வரைக்கும் கலங்காமல்
கவனமாக பார்த்து கொள் என கூறி சென்றான் ,,, 




எழுத்துருவாக்கமும் வடிவமைப்பும்
மேனகை

No comments:

Post a Comment