Monday, December 2, 2013

ஆலய மணி ஓசை கேட்குமா ,,,ஆன்மீக தலங்கள் எம்மை அழைக்குமா ,,,,,,,

ஆலய மணி ஓசை கேட்குமா ,,,ஆன்மீக தலங்கள் எம்மை அழைக்குமா ,,,,,,,

அன்னை மண்ணில் தவழ்ந்த அந்த நாட்களில் வீட்டில் சாப்பிட வழி இல்லாத காலத்தில் கோவில் மணி அடித்தால் எமக்கு சிறு வயதில் வரும் சந்தோசத்தை நினைத்து பாருங்கள்,,,,,,,,ஏழைகள் ஒருகாலத்தில் கோவில் பிரசாதங்களில் வளர்ந்தார்கள் ஒரு வேளை உணவாவது உண்டார்கள் ,,,இன்று அந்த நிலை இருக்கா ,,,,,,கோவில்களில் பொங்கல் செய்து கோவில் வரும் குழந்தைகளுக்கு வருபவர்களுக்கு உணவு கொடுகின்றார்களா ,,,,,,எம் முன்னோர்கள் வகுத்தார்கள் ஒரு நெறி கோவில்களில் செய்யும் பிரசாதத்தை கோவிலுக்கு வருபவர்களுக்கு பகிர்ந்து உண்ண கொடுக்க வேண்டும் வீட்டுக்கு எடுத்து செல்ல கூடாது என்று சொன்னார்கள் வீட்டுக்கு எடுத்து சென்றால் பாவம் என்றும் சொன்னார்கள் ,,,எஞ்சிய உணவை பட்சிகளுக்கும் பசுக்களுக்கும் கொடுங்கள் என்றும் கூறினார்கள் ,,,இதை இன்று யார் செய்கின்றார்கள் ,,,இன்று பணக்கார கோவில் நிர்வாகிகள் வீட்டு பிள்ளைகளும் ,உபயகாரர் உறவினர்களும் மட்டும் தான் வண்டிலில் காரில் ஆட்டோவில் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு போய் சாப்பிடுகின்றார்கள் ,,,,,,இதை அவர்கள் வீடுகளில் செய்தே வழமை போல் சாப்பிடலாமே ,,,,,ஆனால் தங்கள் திருவிழா நாங்கள் பொங்கல் செய்தோம் என்று புகழ் பெறுவதற்கே இன்று பலர் கோவில்களில் விழா எடுக்கின்றார்கள் ,,,,,,,,,,,

ஏழைகளுக்கு அன்னம் இடுவதற்காக உருவாக்கப்பட்ட அன்னதான மடங்கள் ஊர் உலகம் முழுக்க மக்கள் காசை பறித்து வங்கிகளிலும் ,நிர்வாகிகள் தங்கள் சொந்த முதலீடுகளிலும் புரள விட்டு விட்டு ,தண்ணீரை கலக்கி சாம்பாராக மாற்றி அன்னத்தின் மேல் தெளித்து ஏழைகளுக்கு வழங்கி விட்டு நாங்கள் அன்னதானம் கொடுத்தோம் என்று புகழ் பேசுகின்றார்கள் .எங்கள் மூதாதையர் ,நெல்லில் இருந்து காய்கறிகள் வரை தங்களால் இயன்ற பொருட்களை மனமுவந்து வழங்கி தங்கள் உடல் உழைப்பை வழங்கி எல்லோருக்கும் பொதுவாக நிழல் அமைத்து ஒரு தொண்டாக ஏழைகளுக்கு பசியாற நிறைவாக உணவளித்தார்கள் ,,இதுவே ஆத்மாவின் தாகம் தீர்த்த அன்னதானம் ,,,,ஆனால் இன்று அன்று நற்பணி செய்த எம்முன்னோர்கள் பெயரை புகழ் பெயராக சொல்லி கொண்டு எம்மவர்கள் இன்று பொதுவான அன்னதான மடங்களில் vip முக்கிய பிரசித்தி வாய்ந்த மா மனிதர்களுக்கு என்று தனியாக ஒரு கட்டிடம் கட்டி அதற்குள் உயர்ரக விருந்து கதிரை மேசை போட்டு உபசாரம் ,,,இதன் பெயர் அன்னதானமா இல்லை மனித சமத்துவத்தை சீர்குலைக்கும் ஆன்ம துரோகமா,,,,,ஆலயங்கள் எம்முன்னோர்கள் சமத்துவத்தை பேணும் நோக்கத்திலேயே ஆரம்பித்தார்கள்,,,அவற்றை போதிப்பதற்கே பாடசாலைகளுக்கு வித்தியாலயங்கள் என்றும் பெயர் சூட்டினார்கள் ,,,,,,,,வசதிகள் இன்று வழக்கத்தை மாற்றி அமைத்துவிட்டது .நெறிகள் இன்று மனித நேயத்தை மனித சமத்துவத்தை மறந்து நிற்கின்றது,,,,,ஏழைகளை வாழவைத்து சமத்துவத்தை ஏற்படுத்த எம்முன்னோர்களால் உருவாக்கபட்ட ஆலயங்கள் .புனிதமான மடங்கள் இன்று .மூட நம்பிகைகளை புகுத்தும் சாமிகளின் கைகளிலும் தங்கள் சுயவாழ்வை வளம்படுத்தும் பண முதலைகள் கைகளிலும் அகப்பட்டு இருக்கிறது ,,,,,இவர்கள் கைகளில் இருந்து விடுபட்டு ,,உண்மையான நெறியில் சரியான பாதையில் மக்களை நெறிப்படுத்த ஆலய மணியோசை மீண்டும் கேட்குமா ,,,,ஆன்மீக தலங்கள் எம்மை அழைக்குமா ,,,,,,,,,,,,,
சிவ மேனகை ,,,,

No comments:

Post a Comment